Home செய்திகள் அனைவருக்கும் உடனடி இபாஸ்! முடிவுக்கு வந்த இபாஸ் சிக்கல்

அனைவருக்கும் உடனடி இபாஸ்! முடிவுக்கு வந்த இபாஸ் சிக்கல்

கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிற இடங்களுக்கு பயணிப்பவர்கள் இபாஸ் எடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் எடுப்பதில் பல்வேறு சிக்கல் இருப்பதாக புகார்கள் குவிந்தது.

தமிழகத்தில் இபாஸ் இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர்களுக்கு மட்டுமே இபாஸ் உடனடியாக வழங்கப்பட்டு வந்தது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் பிற மாவட்டங்களுக்கு செல்லவும், தொழில்முனைவர் பிற மாவட்டங்களுக்கு செல்லவும் பல்வேறு சிக்கலை சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தி பேசிய அவர், இந்தியாவில் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் தமிழகத்தில் அதிகளவில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் இ பாஸ் குறித்து பேசிய அவர் இ பாஸ் கேட்பவர்களுக்கு விரைவாக இ பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தொழிற்சாலைகளில் பணி புரிவதற்கு வருகைதரும் வெளிமாநிலத்தவர்களுக்கு இபாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் இபாஸ் விரைவாக வழங்கும் நடவடிக்கையாக முன்னதாக இபாஸ் வழங்க ஒரு குழு இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் தடையின்றி பொதுமக்கள் முக்கிய தேவைக்கேற்ப பயணிக்க 17.8.2020 அன்று முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டைகளை பயன்படுத்தி தங்களது தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் அனுமதி எந்தவித தடையுமின்றி உடனுக்குடன் கிடைக்கும் என உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.

முன்னதாக கூறியது போல், கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு மக்கள் பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here