கோவிட் 19 நோய் தொற்றால் நாடு முழுவதும் இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் ராஜஸ்தான் 10 ஆவது இடத்தில் உள்ளது. இங்கு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 530 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை டெல்லியைச் சேர்ந்த சுப்ரியா பரத்வாஜ் என்ற பத்திரிக்கையாளர் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்த மாதம் 12 ஆம் தேதி தெலங்கானாவின் மேடாக் மாவட்டத்தில் உள்ள ரமயபல்லி கிராமத்தின் மத்தியில் உள்ள மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டது. 3000 மக்கள் வாழும் அந்த கிராமத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயலை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.