Home செய்திகள் இந்தியா கோவாக்சின் கொரோனாவை ஒழிக்குமா........இந்தியாவின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பு !

கோவாக்சின் கொரோனாவை ஒழிக்குமா……..இந்தியாவின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பு !

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 நோய் தொற்று முதலில் சீனாவின் வூபே மாகாணத்தின் வூஹான் நகரில் தோன்றியது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த நோய் தொற்று தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. உலகளவில் 1 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்புகள் பொருத்தவரை இந்தியாவில் குறைந்த காணப்பட்டாலும் மற்ற நாடுகளில் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் முயன்று வருகிறது. இதுவரை 133 தடுப்பூசிகள் அமெரிக்க, பிரேசில், இங்கலாண்ட உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் 10 மட்டுமே விலங்குகள் சோதனைக்குப் பின்னர் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நிலையில் உள்ளன. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு முழு வீச்சில் அனைத்து நாடுகளும் பணியாற்றி வருகின்றன.

இந்த நோய் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்போ, இதற்கு மேல் தான் நோய் பரவல் அதிவேகம் எடுக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி வருவதற்கு ஒராண்டு காலம் ஆகலாம். எனவே அனைத்து நாடுகளும் உரிய கொள்கைகளை வகுத்து செயல்படவில்லை என்றால் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது என்பது கடினமான செயல் என்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பில் அமெரிக்க, கனடா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கிட்டத்திட்ட நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியா தனது முதல் உள்நாட்டு தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவாக்சின் எனப்படும் இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த தடுப்பு மருந்தை பரிசோதனை செய்ய இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐ.எம்.சி.ஆர் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைராலாஜி நிறுவனம் இணைந்து இந்த தடுப்பூசியை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளனர். இது இந்த மாதம் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ரோடாவைரஸ், போலியோ, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பாரத் பயோ டெக் நிறுவனம் வெற்றிகரமாக தடுப்பூசிகளை கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...