Home செய்திகள் உலகம் சிறுபான்மை மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்கிறதா கம்யூனிச நாடு சீனா?

சிறுபான்மை மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்கிறதா கம்யூனிச நாடு சீனா?

சீனாவில் வசிக்கும் சிறுபான்மை இனமான உய்குர் இன முஸ்லிம் மக்களின் பிறப்பு விகிதத்தை குறைக்க, அவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்து கட்டாய கருத்தடை செய்வதாக அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உய்குர் முஸ்லிம் இன மக்களை முகாம்களில் அடைக்கப்படுவதாக ஆரம்பக்கட்டத்தில் சீனா மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் மறுத்தது. ஆனால் சீனாவின் ஜின்ஜியாங்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதை ஒழிக்கும் நடவடிக்கையாக முகாம்கள் அமைத்தோம் என சீன ஒப்புக் கொண்டது.

இந்த நிலையில் புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து AP செய்தி நிறுவனம் மேற்கொண்ட புலனாய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சீனாவில் 25-க்கும் மேற்பட்ட முன்னாள் கைதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் நேர்காணல் மூலம் புதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று அம்பலமாகியிருக்கிறது.

அதில், சீனாவில் உள்ள உய்குர் இன மக்களுக்கு கட்டாய கருத்தடை மேற்கொள்ளப்படுவது என்பது கட்டாயமாக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இனப்படுகொலை என்பதற்கு இணையாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள மேற்குப் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டாய கருத்தடை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் உய்குர் முஸ்லிம் இன மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்வது பிற பகுதியை விட ஜின்ஜியாங் மாகாணத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அந்த பகுதியில் குழந்தைகள் பெற்றக்கொள்ளப்படும் உய்குர் இன மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள், மேலும் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

சீன அரசு உயர்குர் இன முஸ்லிம் பெண்கள் சிலருக்கு ஐயூடி கருத்தடை சாதனத்தை பொருத்தியிருக்கிறது. அதோடு குழந்தை பெற்றவர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது அபராதம் தரமறுப்பவர்கள் சித்ரவதை முகாமில்போட்டு தண்டிக்கப்படுகிறார்கள் எனவும் புலனாய்வு ஆய்வில் தெரியவந்துள்ளது.

உய்குர் முஸ்லிம் இன மக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சீன அதிகாரிகளின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறபான்மை மக்கள் அனைவரையும் சீன அரடு அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்ற சில பெண்களுக்கு அவர்களுக்கு தெரியாமலே மருத்துவர்களால் கருத்தடை மாத்திரை கொடுக்கப்பட்டு வருகிறது.

உய்குர் முஸ்லிம்களுக்கு இது போன்று கொடுமைகள் நடப்பதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது எனவும் இனம், மதம் என்ற அடிப்படையில் மக்கள் துன்புறத்தப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் இதுகுறித்து ஐ.நா விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here