Home செய்திகள் இந்தியா ஆகஸ்ட் 15-க்குள் தடுப்பூசி சாத்தியமா? தடுப்பு மருந்து சோதனைக்கான விதிமுறைகள் என்ன?

ஆகஸ்ட் 15-க்குள் தடுப்பூசி சாத்தியமா? தடுப்பு மருந்து சோதனைக்கான விதிமுறைகள் என்ன?

உலகளவில் எந்த நோய் தொற்று பரவினாலும் அதற்கான மருந்துகள், தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் போட்டி போடுவது வழக்கம். அந்த வகையில், கொரோனாவுக்கு முதலில் மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இந்த பந்தயத்தில் உலகின் பார்மசி என்று அழைக்கப்படும் இந்தியாவும் இலக்கை அடைய போராடி வருகிறது. அதன்படி, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பூசியை சோதிக்க இந்திய மருந்து ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15க்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் கூறும் நிலையில், ஐசிஎம்ஆர் கூறுவது சாத்தியமா என கேள்வி எழுந்துள்ளது.

ஒரு தடுப்பூசி பல்வேறு சோதனை கட்டங்களை தாண்டிய பிறகு தான் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இதில், எந்த கட்டத்திலும் சிறு குளறுபிடிகள் ஏற்பட்டாலும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி பாதியில் கைவிடப்படுகிறது.

முன் மருத்துவ ஆய்வுகள்:
நோய்த்தொற்றிக்கான தடுப்பூசிகள் ஆய்வகங்களில் கண்டுபிடிக்கப்படுகின்றன. மனித சோதனைக்கு முன், ஆய்வகங்களில் உள்ள மனித திசு, செல்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகின்றன. எலிகள் மற்றும் குரங்குகளுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சோதனை வெற்றி பெற்றால், மனிதர்களில் சோதனை செய்ய அந்தந்த நாட்டு அரசாங்கத்திடம் அனுமதி கோரப்படுகிறது.

முதல் கட்டம்:
மனித சோதனைக்கான முதல் கட்டத்தில் ஆரோக்கியமான 18 வயது முதல் 55 வயது வரை உள்ள 20 – 100 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். சோதனைக்கு முன் இந்த தன்னார்வலர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள், இதய நோய், சிறுநீரக பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள் அல்லது வேறு எந்த நோயும் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு, மருந்தால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டம்:
முதல் கட்ட சோதனையில் தன்னார்வலர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத பட்சத்தில், இரண்டாம் கட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கட்டத்தில் 100 – 1,000 பேர் வரை சோதிக்கப்படுகின்றனர். இந்த சோதனையில், தன்னார்வலர்களின் உடல்கள் ஏதேனும் எதிர்ப்பான்கள் உற்பத்தி செய்யப்படுகிறா, நோய் எதிர்ப்பு திறன் கூடுகிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது.

மூன்றாம் கட்டம்:
இரண்டாம் கட்ட சோதனை வெற்றி பெற்ற பிறகு, மூன்றாம் கட்ட சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், 1,000 – 1,00,000 பேர் வரை சோதிக்கப்படுகின்றனர். இந்த சோதனையில், பாதி பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. மீதி பேருக்கு உப்பு கரைசல் வழங்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டோர் மற்றும் மருந்து வழங்கப்படாதவர்களை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில், தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் சோதிக்கப்படுகிறது. 6 முதல் 12 மாதங்கள் வரை எடுக்கும் இந்த கட்டங்களை தாண்டிய பிறகு, அந்தந்த நாட்டின் ஒப்புதலுடன் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here