Home செய்திகள் கிறிஸ்து பிறப்புக்கு முன் வாழ்ந்தவர்களின் எலும்புக்கூடுகளா?- கீழடி ஆராய்ச்சியில் அதியம்!

கிறிஸ்து பிறப்புக்கு முன் வாழ்ந்தவர்களின் எலும்புக்கூடுகளா?- கீழடி ஆராய்ச்சியில் அதியம்!

மதுரை மாவட்டத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கிராமம் அமைந்துள்ளது.

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அப்போது கீழடி நிகழ்ச்சியில் நேரடியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மதுரை எம்.பி., சு.வெங்கடேஷன், தொல்லியல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கின. ஆனால், அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே, கடுமையான மழைப்பொழிவு காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அகழாய்வுப் பணி நடைபெறும் குழிகளில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, மீண்டும் பணிகள் முழுவீச்சில் தொடங்கின. பிறகு மணலூரில் உலை போன்ற அமைப்பும் கீழடியில் பெரிய அளவிலான விலங்கின் எலும்புகளும் கொந்தகையில் முதுமக்கள் தாழியும் மனித எலும்புகளும், அகரத்தில் கி.பி- 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயங்களும் கிடைத்தன.

6-ம் கட்ட தொல்லியல் ஆய்வில் 4 இடங்களிலும் முக்கியமான தொல்லியல் எச்சங்கள் கிடைத்திருப்பது சிறப்பு மிக்கது என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் கதிரேசன் – சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவரும் பழமை வாய்ந்த ஈமக்காட்டில் முதுமக்கள் தாழியும், எலும்புகளும் கிடைத்துள்ளது.
முன்னதாக 75 செ.மீ அளவுள்ள குழந்தையின் முழு எலும்புக் கூடு கிடைத்து ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இந்த எழும்புக்கூடுகளின் பாலினம், வயது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீண்டும் 95 செ.மீ அளவில் உள்ள குழந்தையின் எலும்புக் கூடு ஒன்று கிடைத்துள்ளது. தொல்லியல் அதிகாரி சிவானந்தம் தலைமையில் 6-ம் கட்ட அகழாய்வு தீவிரவமாக நடைபெற்று வருவதாக தொல்லியல் ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இரண்டு உடல்களை வைத்து தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் இங்கு நடைபெறும் ஆராய்ச்சியில் பொருட்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் தலைப்பகுதி மட்டும் பெரிதாக இருக்கிறது. இதற்கான காரணம் தற்போது வரை முழுவதுமாக தெரியவில்லை. கிமு 6ம் நூற்றாண்டிற்கு முந்தைய உடலாக தான் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டு வருகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here