Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்தா? உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன!

தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்தா? உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன!

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்கும் வகையில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சட்டம், கடந்த 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்த இடஒதுக்கீட்டு சட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், 16% இடஒதுக்கீட்டை, கல்வியில் 12%, வேலைவாய்ப்பில் 13%ஆக குறைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தநிலையில், 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பை கடந்து, மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

அப்போது, இடஒதுக்கீட்டின் அளவு 50% உச்சவரம்பை மீறக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமா?, புதிய சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க, பட்டியலில் மாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளதா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

The Supreme Court has ordered the cancellation of the reservation for the Maratha community
The Supreme Court has ordered the cancellation of the reservation for the Maratha community

பின்னர், வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து, உத்தரவிட்டனர். மேலும், மராத்தா சமூகத்தினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை யாராலும் மறுக்க முடியாது என்றும், அச்சமூகத்தினர் தேசிய பொது நீரோட்டத்தில் கலந்து வாழ்ந்து வருவதாகவும் நிதிபதிகள் கூறினர்.

இதனால், 50% உச்சவரம்பை மீறி, மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க எவ்வித அசாதாரண சூழலும் நிலவவில்லை என்றும் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, 102வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை நிலை நிறுத்திய நீதிபதிகள், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கான (எஸ்இபிசி) பட்டியலை மாநிலங்கள் தீா்மானிக்க முடியாது என்றும் கூறினர். குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, தமிழகத்தில் 50% உச்சவரம்பை கடந்து, இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1992ம் ஆண்டில், இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை 50%-க்குள் குறைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டன.

இதைத்தொடர்ந்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால், தமிழ்நாடு பின்தங்கிய, பட்டியலின மற்றும் பழங்குடியினர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் வைக்கப்பட்டது. இதன் மூலம், நீதிமன்றங்களின் மறு ஆய்வில் இருந்து இச்சட்டம் பாதுகாக்கப்படுகிறது.

இருப்பினும், 9வது அட்டவணையில் இச்சட்டம் பாதுகாக்கப்படுவது அரசியலமைப்பிற்கு விரோதமானது
என்றும், அடிப்படை உரிமைக்கு எதிரானது எனவும் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், 69% இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்கக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில உள்ளன.

இந்த வழக்குகள் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, மராத்தா வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு, இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மராத்தா இடஒதுக்கீடு 9வது அட்டவணையில் இணைக்கப்படவில்லை.

2007ம் ஆண்டிற்கு பிறகு, 9வது அட்டவணையில் இணைக்கப்படும் ஒவ்வொரு சட்டமும் உச்சநீதிமன்ற ஆய்விற்கு பிறகே சேர்க்க முடியும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்தநிலையில், 9வது அட்டவணை என்ற கேடயம் தமிழகத்தில் உள்ள 69% இடஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here