Home செய்திகள் இந்தியா பப்ஜி விளையாடியதில் 16 லட்சம் பறிபோனது : அதிர்ச்சியில் தந்தை !

பப்ஜி விளையாடியதில் 16 லட்சம் பறிபோனது : அதிர்ச்சியில் தந்தை !

கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனியார் பள்ளிகள் இணையம் மூலம் பாடம் கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆன்லைன் மூலம் பாடம் கற்க, அவரது தாய் தனது மொபைலை கொடுத்துள்ளார். ஆனால் அச்சிறுவனோ படிப்பதற்கு பதில் மொபைல் ஃபோனில் பப்ஜி என்ற விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இவர் அதிக நேரம் மொபைலில் செலவிடுவதை கண்டு தாயார் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுவன் ஆன்லைனில் படித்துக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ஒரு நாள் அச்சிறுவனின் தந்தை வங்கிக்கணக்கை சரிபார்த்த போது 16 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மிகவும் குழப்பம் அடைந்த தந்தை எவ்வாறு இது சாத்தியம் என்று தனது மனைவியிடம் வினவியுள்ளார். அதன் பின்னர் விசாரித்ததில், தனது மகன் தொடர்ந்து பல நாட்களாக பப்ஜி விளையாடி கொண்டிருந்ததும், அதில் அடுத்த அடுத்த நிலைக்குச் செல்ல வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை பிரயோகித்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் தனது நண்பர்களுக்கு பணம் கொடுத்து உதவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அச்சிறுவன் மிகவும் சாமர்த்தியமாக வங்கியில் பணம் எடுத்ததற்கான வரும் மசெஜ்ஜூகளையும் அழித்து வந்ததால் தாய்க்கும் இது பற்றிய சந்தேகம் எழவில்லை, தன் மகன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து என்ன செய்வதென்று அறியாத பெற்றோர்கள் பணத்தைத் திரும்பப் பெற ஏதேனும் வழி உள்ளதா என்று காவல் துறையினரிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால் தெரிந்தே பணத்தை செலவிட்டதால் ஒன்றும் செய்ய இயலாது என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் மனமுடைந்த தந்தை தனது மகனை ஒரு பழுது பார்க்கும் கடையில் வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கிறார். மேலும் அவர், இனி என் மகனை வீட்டில் வைத்திருக்க இயலாது, அவனது படிப்பதற்கு மொபைலும் கொடுக்கப்படாது எனத் தெரிவித்திருக்கிறார்.

அச்சிறுவனின் தந்தை ஒரு அரசு அதிகாரி, அவர் இந்த 16 லட்சத்தை மகனின் படிப்புச் செலவு மற்றும் மருத்துவச் செலவிற்காகச் சேர்த்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here