Home செய்திகள் இந்தியா 100 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது: புதிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் மோடி புகழாரம்!

100 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது: புதிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் மோடி புகழாரம்!

34 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மனிதவள மேம்பாட்டுத்துறை, கல்வி துறையாக மாற்றப்படும் எனவும் கல்வித்துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதோடு 5-3-3-4 என்ற அடிப்படையில் கொள்கை வடிவமைக்கப்பட்டது. அதில் 5 ஆண்டு அடிப்படைக் கல்வி, 3 ஆண்டு ஆயத்தக் கல்வி, 3 ஆண்டு நடுநிலைக் கல்வி, 4 ஆண்டு உயர்நிலைக் கல்வி என்று மாற்றப்படும் என வகுக்கப்பட்டது.

6 ஆம் வகுப்பு முதல் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள், கைத்தொழில் கற்றுத்தரப்படும், கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படும். அதில் 2 மொழிகள் இந்திய மொழியாக இருக்க வேண்டும், இலவச கட்டாய கல்வி 12ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தது.

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை குறித்து நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டது. இதில் புதிய கல்விக் கொள்கையில் நிறைபாடு குறைபாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக புதிய கல்விக் கொள்கை தொடர்பான கவர்னர்கள் மாநாடு இன்று தொடங்கி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினர்.

பிரதமர் மோடி அதில் பேசியதாவது, புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டனர், 100 ஆண்டுகளாக இருந்த பிரச்சனைக்கு இந்த கல்வி கொள்கையில் தீர்வு காணப்பட்டுள்ளது. கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை, இந்த கல்விக் கொள்கை மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் புதிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

அதோடு, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் ஏணைய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, எது நமது மூளையை சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே அறிவு, மாணவர்களின் தேர்வு சுமைகள் இதில் தீர்வு காணப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். பெரும்பாலான மாநிலங்கள் தேசியக் கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதோடு தேசியக் கல்விக் கொள்கை விரைவில் நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும் என கூறினார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here