Home செய்திகள் இந்தியா வாழ்ந்து கெட்ட கட்சியாக மாறியதா காங்கிரஸ்? – பீகார் கற்று தரும் அரசியல் பாடம்!

வாழ்ந்து கெட்ட கட்சியாக மாறியதா காங்கிரஸ்? – பீகார் கற்று தரும் அரசியல் பாடம்!

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், அனைத்து மாநிலங்களுக்கும் பல பாடங்களை கற்று கொடுத்துள்ளது.

கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு மத்தியில், இந்தியாவில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, இந்துஸ்தானி அவாம் சோர்ச்சா கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நிலவியது.

ஆட்சி அமைக்க 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 125 தொகுதிகளை கைப்பற்றி பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் வென்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், தேஜஸ்வி யாதவின் முதலமைச்சர் கனவு பொய்த்து போனது.

இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது காங்கிரஸ். மெகா கூட்டணிக்கு தலைமை வகித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, 144 இடங்களில் போட்டியிட்டது. முன் ஒரு கால வெற்றிகளை குறிப்பிட்டு, 75க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு, 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், காங்கிரஸ் படுதோல்வியை தழுவியுள்ளது. 50 தொகுதிகளை கோட்டைவிட்டு, வெறும் 20 தொகுதிகளில் மட்டும் முட்டி மோதி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மோடி என்னும் பிரச்சார பீரங்கி

கடந்த கால தேர்தல்களை போல், இந்த தேர்தலிலும் ஓர் பிரச்சார பீரங்கியை போலவே பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டுள்ளார். சென்ற இடமெல்லாம் வாக்குகளை குவிக்கும் அவரது கவர்ந்திழுக்கம் பேச்சு, பீகாரிலும் கை கொடுத்துள்ளது. அதேசமயம், மக்கள்வை தேர்தலில் தான் போட்டியிட்ட தொகுதியில் கூட வாக்குகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ராகுல் காந்தி, மீண்டும் ஒரு ஆளுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

எங்க ஏரியா உள்ள வரதே

தேச பாதுகாப்பை சுற்றி பாஜக போடும் அரசியல் கணக்கு அனைவரும் அறிந்ததே. பாஜகவின் 2019 மக்களவை தேர்தல் வெற்றிக்கு பாலக்கோடு தாக்குதல் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. இதனால், எதிரியை அவரது கோட்டையிலேயே அடிக்கலாம் என திட்டமிட்டு, லடாக் எல்லை பிரச்சனையை காங்கிரஸ் கையில் எடுத்தது. ஆனால், இது காங்கிரஸுக்கு சிறிதும் உதவவில்லை. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரமும் பாஜகவை அசைத்து பார்க்கவில்லை. மாறாக பெருவாரியான தொழிலாளர்கள் பாஜகவிற்கே வாக்களித்ததாக கூறப்படுகிறது.

வாழ்ந்து கெட்ட கட்சியாக மாறியதா காங்கிரஸ்?

அண்மை காலமாகவே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகவும் மோசமானதாகவே உள்ளது. 2 மக்களவை தேர்தல்கள், அடுத்தடுத்த மாநில சட்டமன்ற தேர்தல்கள் என தொடர் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி கரைந்து வருகிறது. முழு நேர தலைவர் இல்லாதது, அதிருப்தி தலைவர்களை ஒருங்கிணைத்து செல்லாதது, முறையற்ற நிர்வாகம் போன்ற பல காரணங்களால், காங்கிரஸ் கட்சி கசப்பான காலத்தை சந்தித்து வருகிறது.

காங்கிரஸின் அண்மை கால செயல்திறனை எடுத்து பார்த்தால், அனைத்தும் சொதப்பலே. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 2017 சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்ட 105 தொகுதிகளில் வெறும் 7ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2019 மகாராஷ்டிர தேர்தல், தற்போதைய பீகார் தேர்தலிலும் இதே நிலைதான்.

சமகால அரசியலுடன் ஒட்டாமல், கடந்த கால வெற்றிகளுடன் காங்கிரஸ் கட்சி வாழ விரும்புகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய்க்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தான் தோன்றுகிறது. காங்கிரஸின் பிடிவாதம் கட்சியை மட்டுமின்றி, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கும் வீழ்ச்சியை பெற்று தருகிறது.

இளம் தலைவர் தேஜஸ்வியால் ஈர்க்க முடிந்த கூட்டத்தை கூட, ராகுல் காந்தியால் கவர முடியவில்லை. இந்தியளவில் பாஜகவிற்கு மாற்று வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், வயதான ஜோ பைடனால் நிகழ்த்த முடிந்ததை, காங்கிரஸால் செய்ய முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று கட்சி தலைமை ஆராய வேண்டும்.

இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், உள் அமைப்புகளை விரைவில் மறுசீரமைப்பு செய்துக் கொள்ளாவிட்டால், அதன் முடிவை யாராலும் தடுக்க முடியாது. பீகார் மாநில சொதப்பல்கள், வரவிருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில தேர்தல்களில் பிரதிபலிக்கும். அங்கு காங்கிரஸ் சிறு துரும்பை போல் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழலில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை காங்கிரஸ் கட்சி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here