Home செய்திகள் இந்தியா பீகாரில் உடைகிறதா பாஜக கூட்டணி: முதலமைச்சருக்கு செக்!

பீகாரில் உடைகிறதா பாஜக கூட்டணி: முதலமைச்சருக்கு செக்!

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம், வரும் நவம்பர் 29ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில், பீகாரில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல்களுக்கான ஆயத்த பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஹாட்ரிக் வெற்றி பெற்ற முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 4வது முறையாக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமாருக்கு கூட்டணிக்குள் இருந்தே குடைச்சல் வருகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, முதலமைச்சர் நிதிஷ் குமாருடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது.

பீகாரில் தலித் வாக்குகள் மொத்தம் 17%. இந்த வாக்குகளை சேகரிக்க பாஜகவுக்கு ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி உறுதுணையாக இருந்து வருகிறது. இதேபோல், தன் பக்கம் ஒரு தலித் தலைவரை நிறுத்திக் கொள்ள முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் சோர்ச்சா கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமார் கொண்டு வந்துள்ளார்.

இதை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஏற்கவில்லை. இந்தநிலையில், லோக் ஜனசக்தி கட்சி பாஜக கூட்டணிக்கு வெளியே, ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக 143 இடங்களில் போட்டியிட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here