Home செய்திகள் இந்தியா நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி வெடி பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டது. இந்த காரில் வெடி பொருட்களுடன் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை எச்சரிக்கும் வகையில் ஒரு கடிதமும் இருந்திருக்கிறது.

case of a car parked with explosives near Mukesh Ambani's house
case of a car parked with explosives near Mukesh Ambani’s house

இதைத்தொடர்ந்து, முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது திருட்டு கார் என்பதும், கார் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி திருட்டு போனதாக கார் உரிமையாளரும், தொழிலதிபருமான மன்சுக் ஹிரன் புகார் அளித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரன் இம்மாத தொடக்கத்தில் சிற்றோடை ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க தொடங்கியது. முதல்கட்ட விசாரணையில் மன்சுக் ஹிரனின் நண்பரும், மும்பை போலீஸ் அதிகாரியுமான சச்சின் வாஸுக்கு வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சச்சின் வாஸை அதிகாரிகள் கைது செய்தனர்.

தொடர்ந்து, நடந்த விசாரணையில், ” வெடிகுண்டுகளை நானே வைத்தேன். இதனால், இந்த வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டு, வெற்றிகரமாக முடித்து வைத்து பதவி உயர்வு மற்றும் நல்ல பெயர் வாங்க விருப்பினேன். இது தொடர்பான, ஆதாரங்களை அழிக்க திட்டமிட்டேன்”, என்று சச்சின் வாஸ் வாக்குமூலம் அளித்தார்.

இதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சச்சின் வாஸை பாந்த்ரா-குர்லா வளாகத்திற்கு அருகே உள்ள மிதி நதிக்கு அழைத்துச் சென்றனர். டைவர்ஸ் உதவியுடன் இரண்டு சிபியுக்கள், ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட், இரண்டு டி.வி.ஆர் மற்றும் ஒரு மடிக்கணினி போன்ற ஆதாரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீட்டெடுத்தனர். இந்தநிலையில், அடுத்தடுத்து திருப்பங்கள் நிறைந்திருப்பதால், இந்த வழக்கு அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here