Home செய்திகள் இந்தியா ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன், அரசை நிர்வகித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும் அவர் குறிப்பிட்டு வருகிறார். இதனால், ஒன்றிய அரசா? மத்திய அரசா? என்ற கேள்வி புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் இன்று நேற்று பயன்பாட்டிற்கு வந்ததில்லை. அண்ணா, கருணாநிதி காலத்திலேயே பயன்படுத்தப்பட்டதுதான். ஆனால், இந்த சொல்லாடல் புழக்கத்தில் நீடிக்கவில்லை. இந்த சூழலில், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து, அரசு அறிக்கைகள், ஊடக சந்திப்புகள் என அனைத்திலும், ஒன்றிய அரசு என்ற சொல்லாடலை தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசியலமைப்பின் அடிப்படையிலேயே ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறோம் என்று திமுகவினரும், பிரிவினையை தூண்டும் வகையில் உள்ளதாக பாஜகவினரும் இந்த விவகாரம் தொடர்பாக முட்டி மோதி வருகினறனர். ஒன்றிய அரசு என்ற சொல்லாடலை திமுக கூட்டணிகள் கட்சிகளான விசிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றன. ஏன் காங்கிரஸும் ஒன்றிய அரசு விவகாரத்தில் திமுகவிற்கு துணை நிற்கிறது.

dmk news in tamil
dmk news in tamil

அதேசமயம், மற்றொரு பெரும் திராவிட கட்சியான அதிமுக, எதிரணியில் உள்ளது. எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசை மத்திய அரசு என்றே அழைக்க வேண்டும். இதற்கு முன்பு மத்திய அரசு என்று அழைத்தவர்கள் தான் இப்போது ஒன்றிய அரசு என்று அழைக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஒன்றிய அரசு என்ற வார்த்தையை திமுகவினர் பயன்படுத்துவது, சிறு பிள்ளைத்தனமான பிரசாரம் என விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யூனியன் என்ற ஆங்கில சொல்லுக்கு, ஒன்றியம் என்று அகராதி சொல்கிறது. எனவே, அது தவறல்ல. ஆனால், ஆங்கிலத்தில் ஒரு தனி வார்த்தைக்கும், வேறு சில சொற்களை இணைத்து சொல்லப்படும் போது, அதன் பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை, பொது அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்தியா என்கிற பாரதம் பல மாநிலங்கள் ஒன்றடங்கிய, நாடாக இருக்கும் என்று, தெளிவாக குறிப்பிடுகிறது. மாநிலங்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில், இந்தியா இணையவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி தலைமையிலான அரசை விட தற்போதைய பாஜக அரசு அசுர பலத்துடன் உள்ளது. மோடி எதிர்ப்பு அலை தமிழகத்தில் இன்றும் வலுவாக வீசி வருகிறது. இந்த சூழலில், பாஜக எதிர்ப்பு மனநிலையை அறுவடை செய்து, ஒன்றிய அரசு என்ற சொல்லாடலை மு.க.ஸ்டாலின் உயிர்ப்புடன் வைத்துக் கொள்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here