Home செய்திகள் இந்தியா தொடரும் பயங்கரவாத தாக்குதல்: இந்தியாவிடம் இருந்து பிரான்ஸ் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்?

தொடரும் பயங்கரவாத தாக்குதல்: இந்தியாவிடம் இருந்து பிரான்ஸ் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்?

பிரான்ஸ் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவிடம் இருந்து அந்நாடு கற்றுக்கொள்ள வேண்டியவை குறித்து இச்செய்தியில் காணலாம்.

அமைதி பூங்காவாக இருந்த பிரான்ஸ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சிரியா, ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வீழ்ச்சிக்கு பிறகு, பிரான்ஸ் நாட்டில் ‘லோன் வுல்ப்’ எனப்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தனிநபரின் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. 2015ம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டில் இத்தகைய தாக்குதல்களின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

Thudhu National News in Tamil

பிரான்ஸ் நாட்டில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் தான். இதனால், 2015ம் ஆண்டிற்கு பிறகு, அந்நாட்டில் இஸ்லாமியர்களை குறிவைத்த குடியேற்ற எதிர்ப்பு மனநிலை மக்கள் மத்தியில் எழுந்தது. இந்த பிளவுகள் மேலும் பல தாக்குதல்களுக்கு வித்திட்டன.

அண்மையில் கூட, இதேபோன்ற தாக்குதல் உலக நாடுகளின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றன. கடந்த 2015ம் ஆண்டு, பிரான்ஸின் பிரபல பத்திரிகையான ‘சார்லி ஹொப்டோ’-வின் அலுவலகம் நபிகள் நாயகம் தொடர்பான கேலிச்சித்திரத்தை வெளியிட்டதற்காக பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இதில், 12 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இதே கேலிச்சித்திரத்தால் தற்போது, பிரான்ஸ் நாட்டில் மேலும் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தை பற்றி பாடம் எடுத்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல்பேட்டி, இந்த கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து, ஆசிரியர் சாமுவேல்பேட்டி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். சாமுவேலைக் கொலை செய்த 18 வயதான அன்சோரோவ், பிரான்ஸ் நாட்டில் குடியேறிய ரஷ்யாவின் இஸ்லாயமியர்கள் அதிகம் வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர். இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு அன்சோரோவ் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ பதிவில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், “இஸ்லாமிய மதம் நெருக்கடியில் உள்ளது. ஆசிரியர் சாமுவேலை இஸ்லாமியர்கள் கொலை செய்துள்ளனர். அவர்கள் நம் எதிர்காலத்தை எடுத்துக் கொள்ள பார்க்கிறார்கள்.” என்று கூறினார். மேலும், நபி நாயகம் தொடர்பான கேலிச்சித்திரத்திற்கு ஆதரவாக கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் குரல் கொடுத்தார்.

இதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. துருக்கி அதிபர் எர்டோகன், இம்மானுவேல் மெக்ரானின் மனநலம் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், பிரான்ஸ் நாட்டு பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தார்.

“பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக்காமல், இம்மானுவேல் மெக்ரான் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும். நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் கேலிச்சித்திரங்களுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை இம்மானுவேல் மெக்ரான் புண்படுத்திவிட்டார்”, என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதம் பல்வேறு பகுதிகளில் இம்மானுவேஸ் மெக்ரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. இந்த விவகாரம் ஓய்வதற்குள், பிரான்ஸ் நாட்டில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் அரங்கேறியது. நைஸ் நகரில் உள்ள நோட்ரி டேம் பெசிலிகா என்ற தேவாலயத்தில் கடந்த 29ம் தேதி கத்தியுடன் புகுந்த பயங்கரவாதி, அங்கு பிரார்தனையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இப்படி பிரான்ஸ் நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதல்களுக்கு என்ன காரணம்? இதற்கெல்லாம் முடிவு இல்லையா? என்பதே பெரும்பாலான மக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. பிரான்ஸில் எதிர்மறை மதச்சார்பின்மை பின்பற்றப்படுகிறது. அதாவது, அந்நாடு எந்த மதத்தையும் போற்றவும் செய்யாது, பாதுகாக்கவும் செய்யாது. மாறாக இந்தியாவில், அனைத்து மதங்களுக்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அரசு சார்பில் சமமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பிரான்ஸில் கடைபிடிக்கப்படும் எதிர்மறை மதச்சார்பின்மையால் அங்கு முகம் முழுவதையும் மறைக்கும் புர்கா அணிய கடந்த 2011ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இது பெண்களை மத ரீதியிலான அடக்கு முறையிலிருந்து விடுதலை செய்யும் ஒரு முற்போக்கான சட்டம் என கூறப்பட்டது. அதேசமயம், இந்த தடை தனிநபரின் மத சுதந்திரத்தை பறிப்பதாக, எதிர் தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், இந்தியாவில் அனைத்து மத உணர்வுகளுக்கும் மதிப்பு வழங்கப்படுகிறது. தலைப்பாகை அணிந்திருக்கும் சீக்கியர்கள் தலைக்கவசம் அணிய வேண்டாம் என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. இதேபோல், ஹஜ் புனித யாத்திரைக்கு அரசு சார்பில் 2017ம் ஆண்டு வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போதைய ஆட்சியாளர்களின் மதச்சார்பின்மை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டாலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில் இதுவரை இந்தியா சிக்கவில்லை. உலக நாடுகளில் இருந்து பல இளைஞர்கள் சாரை சாரையாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தபோது, இந்தியாவில் இருந்து சொற்ப நபர்களே அங்கு சென்றனர். பிரான்ஸ் நாட்டு ஆட்சியாளர்கள் இன்று வரை எதிர்மறை மதச்சார்பின்மையில் பிடிப்பாக இருந்து வருகின்றனர். இதற்கு மாறாக இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொண்டு, பன்முக கலாச்சாரத்தை பிரான்ஸ் நாடு அங்கீகரித்தால், அங்கு மீண்டும் அமைதி மலர வாய்ப்புள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here