Home செய்திகள் இந்தியா அயோத்தியை தொடர்ந்து காசியா - ஆர்எஸ்எஸின் மாஸ்டர் பிளான் என்ன?

அயோத்தியை தொடர்ந்து காசியா – ஆர்எஸ்எஸின் மாஸ்டர் பிளான் என்ன?

அயோத்தியை போல காசி, மதுராவில் மசூதிகளை இடித்து கோயில் கட்ட வலியுறுத்தப்படும் என்று அகில பாரத அகாரா பரிஷத் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை இயற்றவது ஆகிய முக்கிய கொள்கைகளை சுற்றியே ஆர்எஸ்எஸ் இயங்கி வருகிறது.

இதில், முதல் இரண்டை ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை பின்பற்றும் பாஜக அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறது. மீதம் இருப்பது பொது சிவில் சட்டம் மட்டுமே. அதையும் விரைவில் நிறைவேற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் உறுதி பூண்டுள்ளன.

இந்தநிலையில், அயோத்தியை போல காசி, மதுராவில் மசூதிகளை இடித்து கோயில் கட்ட வலியுறுத்தப்படும் என்று அகில பாரத அகாரா பரிஷத் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸின் ஆதரவை இந்த அமைப்பு நாடியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்று நம்பப்படுவதை போல, நாட்டின் பல பகுதிகளை இரு மதத்தினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். அயோத்தியில் தொடங்கும் இந்த பட்டியல் காசி, மதுரா என நீள்கிறது.

காசியின் விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு அதன் பாதியில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதேபோல, கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் மதுராவிலும் ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், காசி, மதுராவில் கோயில் கட்டும் விவகாரத்தை ஆர்எஸ்எஸ் கையில் எடுக்காது என அமைப்பின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பொது சிவில் சட்டத்தை இயற்றுவதிலேயே கவனம் செலுத்தப்படும் என்றும், பெருவாரியான மக்களின் கருத்தின் அடிப்படையில் பின்னாளில் காசி, மதுரா விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், போராட்டங்களை விடுத்து, மக்கள் நல்லணிக்கத்திற்காக பாடுபடவே ஆர்எஸ்எஸ் விரும்புவதாக, அயோத்தி தீர்ப்பு வந்தபோது அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்தை மூத்த தலைவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here