பீகார் மாநிலத்தில் வருகிற 28 ஆம் தேதி தேர்தல் தொடங்குகிறது. 28 ஆம் தேதி தொடங்கும் தேர்தல் நவம்பர் 7 ஆம் வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து பீகாரில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தொகுதி ஒதுக்கீடுகள் முடிவுக்கு வந்துள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவும் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. மறுபுறம் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ்டு (எம்எல்) 19, இந்திய கம்யூனிஸ்டு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இணைந்து 50-50 என்ற அளவில் தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்திக்கின்றன.நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளிலும், பாஜக 121 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் நிதிஷ் குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் இருந்து இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு ஏழு இடங்களும், பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் இருந்து விஐபி கட்சிக்கு சில தொகுதிகளும் ஒதுக்கப்பட உள்ளது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பீகாரில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நிதிஷ் குமார் கட்சியும் பாஜகவும் முணைப்பு காட்டி வரும் நேரத்தில் ஆட்சியை கைப்பற்ற எதிர்கட்சிகள் மெகா கூட்டணி உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்கின்றன