Home செய்திகள் இந்தியா என்னது நீதிபதிக்கே இந்த நிலையா? தாமதமான நீதியால் பாதிக்கப்பட்டுள்ளேன் - நீதிபதி பகீர் தகவல்!

என்னது நீதிபதிக்கே இந்த நிலையா? தாமதமான நீதியால் பாதிக்கப்பட்டுள்ளேன் – நீதிபதி பகீர் தகவல்!

நீதிமன்ற தாமதத்தால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நாளையுடன் ஓய்வு பெற உள்ள தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு சீர்குலைந்துள்ளது. பல்வேறு கீழமை நீதிமன்றங்கள் நீதி அரசர்கள் இன்றி காத்து வாங்கி வருகிறது. இதன் வீரியத்தை உணர்ந்த உச்சநீதிமன்றம், கடந்த 2018ம் ஆண்டில் நீதித்துறையில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரித்தது. அப்போது, நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள 22,036 பணியிடங்களில் 5,133 பணியிடங்கள் காலியாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் மாநில அரசுகள், உயர்நீதிமன்ற நிர்வாகங்களை விளாசியது. நீதித்துறையில் உள்ள காலி பணியிடங்களின் எதிரொலியாக, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. 2018ம் ஆண்டில் வெளியான அறிக்கையின் படி, நாடு முழுவதும் 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், கீழமை நீதிமன்றங்களில் மட்டும் 2.84 கோடி வழங்குகள் தூசி படிந்து முடிவுக்காக காத்து கிடக்கின்றன.

இந்த நிலுவை வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தானே உள்ளன. பெரும்பாலும் செய்திகளில் வெளி வராத கீழமை நீதிமன்றங்களை பற்றி நாம் ஏன் கவலை பட வேண்டும் என்று நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால், திருட்டு, பிக்-பாக்கெட், கொள்ளை, கொலை, நில பிரச்சனை, பண பரிவர்த்தனைகள், திருமணம், விவாகரத்து என பாமரர் கடந்து செல்லும் விவகாரங்களை விசாரிப்பது கீழமை நீதிமன்றங்களே.

அநீதியை எதிர்கொண்ட மனிதருக்கு நீதி கிடைக்க திறந்திருக்கும் முதல் கதவு கீழமை நீதிமன்றங்கள் தான். இந்த கருத்திற்கு பல்வேறு வழக்குகளில் கருத்து தெரிவித்து உச்சநீதிமன்றமும் வலு சேர்த்துள்ளது.

இந்தநிலையில், நாளையுடன் பணி நிறைவு பெறும் தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதிக்கு காணொளி மூலம் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், பல்வேறு நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று, நீதிபதி பானுமதிவுடனான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.

அதில் பேசிய நீதிபதி பானுமதி, தமிழகத்தில் ஒரு பின்தங்கிய மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் தான் பிறந்ததாக தெரிவித்தார். தனக்கு 2 வயது இருக்கும் போது தனது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார் என்றும், அப்போது தந்தையின் உயிரிழப்புக்கு இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் இருந்ததாகவும் கூறினார். தனது தாயார் மனுத் தாக்கல் செய்ததாக குறிப்பிட்ட நீதிபதி பானுமதி, நீதிமன்றத்தின் தாமதத்தாலும், பல செயல்முறை சிக்கல்களாலும், இழப்பீட்டுத் தொகையை பெற முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

நீதிபதி பானுமதியின் இந்த குமுறல், நீதித்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதித்துறையில் உள்ள குறைபாடுகளை மீண்டும் ஒரு முறை நாட்டிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here