Home செய்திகள் இந்தியா கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கு கெடுபிடி: வெளிநாட்டு நிதி பெறும் உரிமம் ரத்து!

கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கு கெடுபிடி: வெளிநாட்டு நிதி பெறும் உரிமம் ரத்து!

இந்தியாவில் இயங்கி வரும் 4 கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் உட்பட 6 தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியாவில் பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு, தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி மீது எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை. இந்த சலுகையை பயன்படுத்தி தொண்டு நிறுவனங்கள், பல வகை மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதை தடுக்க 2010ம் ஆண்டில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க தொடங்கியது. இதன்படி, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறும் தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், அரசின் விதிகளை மதிக்காத வெளிநாட்டு நன்கொடையாளர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், இதுவரை 22 ஆயிரத்து 457 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 20 ஆயிரத்து 674 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 702 நிறுவனங்களின் உரிமம் காலாவதியாகி இருக்கிறது.

இந்தநிலையில், நடப்பாண்டில் 4 கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் உட்பட 6 தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்டில் உள்ள எக்ரியோசோகுலிஸ் நார்த் வெஸ்டர்ன் கோஸ்னர் எவாஞ்சலிகல் மற்றும் வடக்கு எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச், மணிப்பூரில் இயங்கி வரும் எவாஞ்சலிகல் சர்ச்ஸ் அசோசியேஷன் மற்றும் மும்பையில் உள்ள புதிய லைஃப் பெல்லோஷிப் அசோசியேஷன் ஆகிய நான்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் இடைக்காலமாக ரத்து செய்துள்ளது. மேலும், அமெரிக்காவை சேர்ந்த செவன்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச் மற்றும் பாப்டிஸ்ட் சர்ச் ஆகிய இரண்டு கிறிஸ்தவ நன்கொடையாளர்கள் அரசின் கண்காணிப்பில் உள்ளன.

ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மும்பையில் உள்ள புதிய லைஃப் பெல்லோஷிப் அசோசியேஷன் மீது விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் இளைஞரணியான பஜ்ரங் தள் சார்பில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் அந்த தொண்டு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here