Home செய்திகள் இந்தியா மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்: நிஜமா? நாடகமா?

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்: நிஜமா? நாடகமா?

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 27ம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தநிலையில், நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, நந்திகிராமில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.

mamata banerjee attacked news in tamil
mamata banerjee attacked news in tamil

பின்னர், காரில் ஏறிக் கொண்டிருந்தபோது மம்தா பானர்ஜியை 4 அல்லது 5 மர்ம நபர்கள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில், அவரின் காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காரில் ஏறிக் கொண்டிருந்தபோது என்னை 4 அல்லது 5 பேர் தள்ளிவிட்டனர். இது ஒரு சதி. என்னை காக்க காவலர்கள் யாரும் என்னுடன் இல்லை,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மாநில அரசால் அமைக்கப்பட்ட 5 மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

தாக்குதலுக்கு பிறகு மம்தா பானர்ஜி மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதாக கூறி வருவதாகவும், அவரது இடது கணுக்கால், கால், வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்தில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவர் 48 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார் எனவும் கூறினர்.

இதனிடையே, தேர்தல் நேரத்தில் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, பல்வேறு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல், அனுதாப வாக்குகளாக மாறி திரிணாமுல் காங்கிரஸுக்கு பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், காயங்கள் காரணமாக மம்தா பானர்ஜி நேரடி பரப்புரையில் ஈடுபடுவாரா, அப்படி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்றால் அது திரிணாமுல் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here