Home செய்திகள் இந்தியா மத்தியில் மாறும் காட்சிகள்: கனவாகவே கரையுமா ஓ.பி.ஆரின் ஆசை?

மத்தியில் மாறும் காட்சிகள்: கனவாகவே கரையுமா ஓ.பி.ஆரின் ஆசை?

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிறகு, மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்ததில் இருந்து பாஜக பல சாதனைகளை படைத்துள்ளது. இரு முறை அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் அதிகாரத்தை கைப்பற்றியது. பல்வேறு மாநிலங்களில் தாமரையை மலர செய்தது.

இந்தநிலையில், தற்போது மற்றொரு மகுடமாக 25 ஆண்டுகளில் முதன்முறையாக கூட்டணி கட்சிகளை சேர்த்த அமைச்சர்கள் இல்லாத மத்திய அமைச்சரவை கொண்ட அரசாக பாஜக உருமாறியுள்ளது. இந்திய குடியரசுக் கட்சியை சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே மட்டும் மத்திய இணை அமைச்சராக உள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 58 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இதில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 பேரும் அடங்குவர். கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு 8 அமைச்சர் பதவியை பாஜக ஒதுக்கியது.

இதனிடையே, மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த அரசியல் நாடகங்களுக்கு பிறகு, பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி விலகியது. இதனால், சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சவந்த், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிரோமணி அகாலி தளம் கட்சி, பாஜகவுடனான நீண்ட நெடிய கால பந்தத்தை முறித்துக் கொண்டது. மேலும், அந்த கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கரைய தொடங்கி இருக்கும் சூழலில், லோக் ஜனசக்தியை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கடந்த வாரம் இயற்கை ஏய்தினார். இதனால், மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளை சேர்த்த அமைச்சர்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

பிகார் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இருந்து விலகி லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறிய மற்றும் மாநில கட்சிகளின் தயவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணம் பாஜக கட்சிக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணி கரைந்தாலும், மத்தியில் பாஜக ஆட்சி தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை.

இதனால், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கப்பட வாய்ப்பு குறைவு என சொல்லப்படுகிறது. இச்செய்தி அதிமுகவை சேர்ந்த ஒற்றை மக்களவை உறுப்பினரின் கனவு மீது பேரிடியாக விழுந்துள்ளது.

எப்படியாவது அமைச்சர் பதவியை வாங்கிவிட வேண்டும் என அண்மையில் தனது பெயரை மாற்றிக் கொண்டார், ஓ.பி.எஸின் மகன் ஓ.ரவீந்திரநாத். தனது பெயரில் இருந்த குமாரை அவர் நீக்கியுள்ளார். ஆனால், இந்த பெயர் மாற்றம் பாஜகவின் மன மாற்றத்திற்கு வித்திடுமா என்பது கேள்வி குறியே.

இதுமட்டுமின்றி, ஓ.ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்காததற்கு, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே நிலவிய கருத்து வேறுபாடு தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த மோதல் தற்போதும் மறைமுகமாக தொடர்வதால், ஓ.பி.ஆரின் ஆசை கனவாகவே கரையும் சூழல் உருவாகியுள்ளது.

சுதந்திர இருந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸின் கை ஓங்கி இருந்தது. சுமார் 20 ஆண்டுகள் வரை மத்தியிலும், மாநிலங்களிலும் ஒற்றை கட்சி ஆட்சியே நீடித்தது. ஆனால், தற்போது மத்தியில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல், காங்கிரஸ் கட்சி திக்குமுக்காடுகிறது. காங்கிரஸின் இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில், முக்கியமான ஒன்று அகந்தை. தற்போது உயர உயர வளர்ந்து வரும் பாஜகவின் வீழ்ச்சிக்கும் அதே காரணம் வித்திடும் என்பது நிதர்சனமான உண்மை.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here