Home செய்திகள் இந்தியா வைகோ, ராமதாஸுக்கு எல்லாம் குரு., அரசியல் சாணக்கியர் – யார் இந்த ராம் விலாஸ் பஸ்வான்?

வைகோ, ராமதாஸுக்கு எல்லாம் குரு., அரசியல் சாணக்கியர் – யார் இந்த ராம் விலாஸ் பஸ்வான்?

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் தலைவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கிய மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனத் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். பாஜக தலைமையிலான கூட்டணியில் உணவு, பொது விநியோகம், நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்த ராம் விலாஸ் பஸ்வான், பிகாா் மாநிலத்தில் முக்கிய தலித் தலைவராக அறியப்பட்டவர்.

தனது 22வது வயதில், அரசியலில் குதித்த ராம் விலாஸ் பஸ்வான், அரசாங்க உத்தியோகத்திற்கு பதில், மக்கள் பணியை தேர்வு செய்தார். 1968ம் ஆண்டு தனக்கு கிடைத்த காவல் துணை கண்காணிப்பாளர் வேலையை விட்டுவிட்டு, அரசியல் பயணத்தை தொடங்கினார். 1969ம் ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தலில் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தனது அரசியல் ஆட்டத்தை ராம் விலாஸ் ஆரம்பித்தார். பெரும் அரசியல் தலைவர்களின் ஆசியின்றி, ஆரவார பொதுகூட்டங்களில் பங்கெடுக்காமல் அமைதியாக முதல் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அன்று தொடங்கி 42 ஆண்டுகள் இடைவிடாத அரசியல் இன்னிங்ஸில் ராம் விலாஸ் நின்று விளையாடினார் . இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய அவசர நிலையின் போது சிறையில் வாடியதால், எமர்ஜென்சி நாயகனாகவும் உருமாறினார். 1977ம் ஆண்டு பிகாரின் ஹாஜிபூர் மக்களவை தொகுதியில் ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, 4.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார்.

2000ம் ஆண்டு பிகாரின் தலித் முகமாக லோக் ஜனசக்தி கட்சியை ராம் விலாஸ் பஸ்வான் உருவாக்கினார். அரசியல் காற்றை உணர்ந்து, வெற்றி கூட்டணிகளில் இடம்பெறும் சாணக்கியராக திகழ்ந்தார். 10 முறை நாடாளுமன்ற உறுப்பினர், பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆறு பிரதமர்களின் கீழ் அமைச்சர் என தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதில் வைகோ, ராமதாஸுக்கு எல்லாம் குருவாக விளங்கினார்.

மேலும், வி.பி.சிங் அட்சியின் போது மண்டல் கமிஷன், எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்றவற்றை அமல்படுத்தியதில் சமூகநீதி காத்த நாயகனாக முக்கிய பங்காற்றினார். அரசியலில் படிபடியாக காய் நகர்த்தி பிகாரின் குக்கிராமத்தில் இருந்து டெல்லி ஜனபத்தில் சோனியா காந்தியின் பக்கத்து வீட்டுக்காரராக ராம் விலாஸ் மாறினார்.

2002 குஜராத் கலவரத்தால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸுடன் ராம் விலாஸ் கை கோர்த்தார். தனது மகன் சிராக் பஸ்வானின் வற்புறுத்தலால் 2014ம் ஆண்டும் மீண்டும் பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்தார். தொடர்ந்து, 2019ம் ஆண்டில் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், தனது மகனுமான சிராக் பஸ்வானை அறிவித்தார்.

தற்போது, மத்தியில் பாஜக கூட்டணியில் இருக்கும் லோக் ஜன்சக்தி கட்சி, இம்மாத இறுதியில் நடைபெற உள்ள பிகார் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. பொதுவாகவே ஒரு தலைவரின் மரணம் அனுதாப அலையை உருவாக்கும். மேலும், ராம் விலாஸ் பஸ்வானின் மறைவையொட்டி எதிரணியில் உள்ளோர் சிராக் பஸ்வான் மீது கூர்மையாக தாக்குதலில் ஈடுபட தயங்குவார்கள்.

இதேபோல், மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இல்லாததால் பிரதமர் மோடியை மையப்படுத்தி வாக்கு சேகரிக்க கூடாது என சொல்லி வந்த பாஜகவும், சிராக் பஸ்வானுடன் சமரச போக்கில் செல்லும் என சொல்லப்படுகிறது. இதனால், இந்த அனுதாப அலை 17% தலித் வாக்குகளை கொண்ட பிகாரில் சிராக் பஸ்வானுக்கு கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here