இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் உயிரழப்பு சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
உலக நாடுகள் கோவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த போராடி வரும் இந்த நிலையை சாதகமாக்கி சீனா எல்லையில் வேலையை காட்ட தொடங்கி வருகிறது என அமெரிக்க முதன்மை தூதுவர் ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து லடாக் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது. சீன போர் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையலாம் என கூறப்படுகிறது. இந்தியாவும் தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து வருகிறது.
இந்திய சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
இந்த நிலையில் பிரதமர் மோடி லடாக் ஒன்றியத்திற்கு பயணம் மேற்கொண்டு திடீரென ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் விமானம் மூலம் அங்குள்ள நிலைமை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அதேபோல் நிம்முவில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
அதில் ராணுவ வீரர்கள் சமீபத்தில் வெளிப்படுத்திய வீரமானது உலக நாடுகளுக்கு இந்தியாவின் வலிமையை காட்டும் செயல் என குறிப்பிட்டார். அதோடு ஆக்கிரப்புக்கான நேரம் முடிந்துவிட்டது எனவும் இது வளர்ச்சிக்கான நேரம் எனவும் லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் பணி செய்யும் இடத்தைவிட ஒவ்வொருவரின் தைரியமும் உயர்ந்தது எனவும் புகழாரம் சூட்டினார்.
கல்வான் பகுதியில் உயிர்தியாகம் செய்த நாணுவ வீரர்களுக்கு தனது மரியாதையை மீண்டும் செலுத்துவதாக கூறினார். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் உங்கள் வீரமும் தைரியமும் தான் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என பெருமையுடன் தெரிவித்தார்.
நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி இருக்கிறீர்கள் என்று பாராட்டு தெரிவித்த மோடி., வீரம், மானம், இறுதிவரை தேவையானவை, தெளிவான முடிவு இந்த நான்கும் படைக்கு தேவை எனக் குறிப்பிடும் வகையில்
மறமானம் மாண்ட வழிசெலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
என்ற திருக்குறளை கூறினார்.