காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராவர். இவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்தார். கேரளா சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
ராகுல்காந்தி மீனவர்களுடன் உரையாடியதும் கடலில் மீனவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நேரில் கண்டறிய விரும்பினார். இதையடுத்து காலை 5.15 மணியளவில் மீனவர்களுடன் ராகுல்காந்தியும் மீன்பிடிக்கச் சென்றார்.
மீனவர்களுடன் நடுக்கடலுக்கு சென்ற ராகுல்காந்தி அவர்களுடன் சேர்ந்து மீனுக்கு வலை விரித்து மீன் பிடித்தார். மீனவர்களுடன் உற்சாக மிகுதியில் இருந்த ராகுல்காந்தி திடீரென நடுக்கடலில் குதித்தார். உடனே அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சத்தில் உரைந்தனர்.
ஆனால் ராகுல்காந்தி சர்வசாதாரனமாக சௌகரியமாக நடுக்கடலில் நீச்சல் அடித்தார். மீனவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி ராகுல்காந்தியை பாராட்டினர். சுமார் 10 நிமிடம் நடுக்கடலில் நீந்திய ராகுல்காந்தி பின் மீண்டும் படகுக்கு ஏறினார். பின் படகு கரைக்கு திரும்பியது.
மீனவர்கள் வாழ்க்கை தெரிந்துக் கொள்ள விரும்பினேன் அதனால் அவர்களுடன் சென்றேன். மீனவ சகோதரர்கள் கடலுக்கு சென்று கரைக்கு திரும்பும் வரை மிக கஷ்டப்படுகிறார்கள். வலையில் ஒரே ஒரு மீன்தான் சிக்கியது முதலீடு அனைத்தும் மீனவர்களுக்கு நஷ்டம்தான் இவர்கள் சிரமப்பட்டு மீன்பிடிக்கிறார்கள் வேறுயாரோ பயனடைகிறார்கள் என ராகுல்காந்தி கடலுக்கு சென்ற அனுபவம் குறித்து கூறினார்.