Home செய்திகள் இந்தியா ராகுல்காந்தி தள்ளிவிடப்பட்டாரா?., ஊரடங்கை மீறி கூட்டத்தோடு வந்ததால் கைது?- நடந்தது என்ன?

ராகுல்காந்தி தள்ளிவிடப்பட்டாரா?., ஊரடங்கை மீறி கூட்டத்தோடு வந்ததால் கைது?- நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சண்ட்பா பகுதியை சேர்ந்த 19 வயது பெண் 4 இளைஞர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான பாதிப்பால் மருத்துவமனையில் 15 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதோடு இறுதி மரியாதைக்குக் கூட அவகாசம் வழங்காமல் போலீஸார் சடலத்தை எடுத்து நள்ளிரவில் தகனம் செய்தனர். தகனத்தின்போது உறவினர்கள் சிலர் மட்டுமே உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். அதில் எத்தனை ஆதிவாசி மக்களின் குரல்களை நசுக்குவீர்கள் எத்தனை மகள்களை ரகசியமாக எரிக்கப்போகிறீர்கள் இந்த நாட்டின் குரலை உங்களால் ஒடுக்க முடியாது என கடுமையாக தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.

ஹாத்ரஸ் பகுதிக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிக்க ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் டெல்லியில் இருந்து புறப்பட்டனர். இவர்கள் யமுனை விரைவு வழிச்சாலையில் தடுத்து நிறுத்தியதோடு கூட்டமாக யாரும் முன்னேறக்கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் இந்திய தண்டனைச் சட்டம் 188-வது பிரிவின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என கூறினர்.

ராகுல்காந்தியை தொடர்ந்து பயணிப்பதற்கு அனுமதிக்க முடியாது எந காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கவே சரி நானும் பிரியங்காவும் மட்டும் செல்வதை உங்கள் சட்டம் அனுமதிக்குமா என ராகுல்காந்தி கேள்வி கேட்டார்.

அனுமதி வழங்கும் விவகாரம் மட்டும் இல்லை இது தங்களுடையா பாதுகாப்பை தொடர்பாகவும் பிரச்சனை இருப்பதால் அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் தெரித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு கட்டுப்படும்படி கோரிக்கை விடுத்தனர்.

ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி இருந்த இடத்தில் கூட்ட நெரிசல் அதிகரிக்கவே காவல்துறையினர் ராகுல்காந்தியை நெஞ்சில் கை வைத்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராகுல்காந்தி கீழே விழுந்தார். வீடியோ காட்சியில் காவல்துறையினரின் கை ராகுல்காந்தியின் சட்டையில் இருக்கிறது. ராகுல்காந்திக்கு பின்புறத்தில் ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். காவல்துறையினர் அவரை ஓரம் இழுப்பது போல் இருக்கிறது, அப்போது ராகுல்காந்தி கீழே விழுகிறார்.

கூட்டத்தில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து தெரிவித்த ராகுல்காந்தி, காவல்துறையினர் என்னை தள்ளிவிட்டனர். என்னை லத்தியால் தாக்கினர். என்னை மைதானத்துக்கு தூக்கிச் சென்றனர். இந்த நாட்டில் மோடி மட்டும்தான் நடந்துசெல்லவேண்டுமா? சாதாரண மனிதன் நடந்துசெல்லக்கூடாதா? எங்களுடைய வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனால், நாங்கள் நடந்து செல்ல தொடங்கினோம் என ஆவேசமாக கருத்துகளை பதிவிட்டார். ஊரடங்கு விதிகளை மீறியதன் காரணமாக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் பின் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ராகுல்காந்தி கீழே தள்ளிவிடப்பட்டதற்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here