Home செய்திகள் இந்தியா கர்நாடகா கடும் எதிர்ப்பு; காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு சிக்கல்?

கர்நாடகா கடும் எதிர்ப்பு; காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு சிக்கல்?

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பல ஆண்டு கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 21ம் தேதி அடிக்கல் நாட்டினார். முதல்கட்டமாக, ரூ.6,941 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், காவிரியில் உபரியாக வெளியேறும் நீர், கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, காவிரி உபரி நீரானது, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் , ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், தென்மாவட்டங்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

There is strong opposition in Karnataka to the Cauvery-Gundaru link project
There is strong opposition in Karnataka to the Cauvery-Gundaru link project

இந்தநிலையில், கர்நாடகாவில் இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திட்டத்திற்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள் குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மேலும், “காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழகத்திற்கு உரிமையில்லை. இதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துவோம்,” என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இதுமட்டுமின்றி, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேற்று சந்தித்து இந்த திட்டத்திற்கு கடும் எதிர்த்து தெரிவித்திருக்கிறார். இதனால், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தநிலையில், கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி,”காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை. தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களையும் பாஜக சமமாக பார்க்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இரு மாநில விவசாயிகளும் பயனடையவதை பாஜக உறுதி செய்யும்,” என்று தெரிவித்தார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here