Home செய்திகள் இந்தியா பீகாரில் வெல்லப்போவது யார்? - வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள்!

பீகாரில் வெல்லப்போவது யார்? – வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள்!

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம், வரும் நவம்பர் 29ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில், பீகாரில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, இந்துஸ்தானி அவாம் சோர்ச்சா கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில், லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தையை கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 38% வாக்குகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 133 – 143 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெகா கூட்டணி 88 – 98 தொகுதிகளுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 2 – 6 தொகுதிகளில் வெல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here