Home செய்திகள் இந்தியா தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் ஆகிய மூன்று அணிகள் களமிறங்கி இருந்தாலும், கடும் போட்டி என்பது திதிக்கும், மோடிக்கும் இடையேதான் நிலவுகிறது.

கடந்த இருமுறை ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்ட மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலை அலங்கரிக்க முயற்சித்து வருகிறார். வன்முறை, ஊழல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீதும், அவரது கட்சியின் மீது கரும்புள்ளிகளாக படிந்துள்ளன. மேலும், தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், மக்கள் மத்தியில் இயல்பாக தோன்றும் அதிருப்தியும் அவரின் வெற்றி வாய்ப்பிற்கு எதிராகவே உள்ளது.

மேற்கு வங்கத்தை பொறுத்தவரை பாஜகவிற்கென பெரிய தலைவர்கள் யாருமில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கை வைத்தே பாஜக தேர்தலை சந்திக்கிறது. இது கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு கை கொடுத்தது. அதுவரை மேற்கு வங்கத்தில் சொற்ப தொகுதிகளை கைப்பற்றி வந்த பாஜக, மொத்தமுள்ள 42ல் 18 தொகுதிகளை வென்றது.

இதனால், தனது இந்துத்துவா அஸ்திரத்துடன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தா, ரவீந்திரநாத் தாகூர் போன்ற மேற்க வங்க தலைவர்களின் புகழை அறுவடை செய்ய பாஜக முயற்சித்து வருகிறது.

மேலும், பிரிவினை மற்றும் வங்கதேச அகதிகள் பிரச்சனை போன்ற காரணங்களினால் மத ரீதியிலான அரசியலுக்கு மேற்கு வங்கத்தில் எப்போதுமே வளமான வாய்ப்பு இருந்துள்ளது. ஆனால், இதை இதுவரை இடதுசாரிகளோ அல்லது மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸோ பெரிதாக பயன்படுத்தியதில்லை.

among three parties Trinamool Congress the BJP and the Left-Congress Who will win at assembly election 2021 west Bengal
among three parties Trinamool Congress the BJP and the Left-Congress Who will win at assembly election 2021 west Bengal

இந்த இந்து – முஸ்லிம் மத அரசியலை பாஜக மேற்கு வங்கத்தில் கையில் எடுத்துள்ளது. இதற்கு, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாத நபர்களுக்கு எளிதில் குடியுரிமை வழங்கும் சிஏஏ சட்டம் உதவும் என்று கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் ஏணியில் ஏறிக் கொண்டே செல்லும் பாஜகவுக்கு சறுக்கல்கள் இல்லாமல் இல்லை. கடந்த சில மாதங்களில் 19 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உட்பட 28 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவினர். இது பாஜகவிற்கு பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவே பலவினமாகவும் மாறி வருகிறது. மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலருக்கும், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் மேற்கு வங்கத்தில் தற்போது வரை வெளியாகியுள்ள கருத்து கணிப்புகள் படி, மம்தா பானர்ஜி ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்றே கூறப்படுகிறது. கணிப்புகளின் படி மம்தா வெற்றி பெறுவாரா, அல்லது மோடியின் செல்வாக்கு கை ஓங்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here