Home செய்திகள் இந்தியா 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் - மத்திய அமைச்சகம் அதிரடி...

3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் – மத்திய அமைச்சகம் அதிரடி !

ஒரு நாளைக்கு ஆன்லைன் வகுப்புகள் அதிகபட்சமாக 3 மணிநேரம் தான் இருக்க வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோயால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கும் முறை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. ஜூம் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் பாடத்திட்டத்தை அன்றாட கற்பித்து வருகின்றனர். ஆன்லைனில் ஒவ்வொரு பாடத்திற்கும் 30 – 45 நிமிடங்கள் வரை குழந்தைகள் செலவிடுகின்றனர். இதனால் அவர்களின் திரை நேரம் அதிகரித்திருக்கிறது. அதிக நேரம் லேப்டாப், மொபைல் போன்ற கருவிகளில் நேரத்தை செலவிடுவதால் பல்வேறு பிரச்னைகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. இதனால் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் பாடம் கற்பிக்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

அரசின் வழிகாட்டுதல்கள்

பள்ளிகள் நான்கு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் நடைமுறையைப் பின்பற்றுவதை தவிர வேற வழி இல்லை என்பது நிதர்சனம். ஆகையால் ஆன்லைன் வகுப்புகளின் கால அளவையும், அமர்வுகளின் எண்ணிக்கையையும் முறைப்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சில பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறது. பெரும்பாலும் மொபைல், லேப்டாப் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுவதால் இந்த நடைமுறை உதவக்கூடும் என்று கருதி இந்த அறிவிப்பை மத்திய அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் கற்றலுக்கு இடையில் சமநிலை உருவாகும்.
.

திரை நேரத்தைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்கள்

மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் இந்த வழிகாட்டுதல்கள் ‘பிரக்யாதா’ என்று அழைக்கப்படுகிறது. இதில், 1-8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2க்கும் மேற்பட்ட ஆன்லைன் வகுப்புகள் இருக்கக்கூடாது மற்றும் சுமார் 30-45 நிமிடங்கள் வரையே வகுப்புகள் செயல்பட வேண்டும். 9-12 ஆம் வகுப்புகளுக்கு, தலா 45 நிமிடங்கள் வரை நான்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம், இதனால் ஒரு நாளைக்கு 3 மணிநேரம் மாணவர்கள் செலவிடுவார்கள். மேலும் அங்கன்வாடி குழந்தைகள் தங்கள் ஆன்லைன் வகுப்புகளில் 30 நிமிடங்களுக்கு மேல் செலவிடக்கூடாது என்றும் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் வகுப்புகளின் எதிரொலியாக தலைவலி மற்றும் கண்கள் எரிவது உள்ளிட்ட பிரச்னைகளை குழந்தைகள் சந்தித்து வருகின்றனர். இதனால் கவலை அடைந்திருக்கும் பெற்றோர்களுக்கு இந்த வழிமுறைகள் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமையும் என கருதி மத்திய அமைச்சகம் இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை திட்டமிடுவதற்கு முன்பு, பள்ளி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான இணையம், மொபைல் உள்ளிட்ட வசதிகள் அனைவரிடமும் உள்ளதா என்பது குறித்து கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனவும் அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here