Home செய்திகள் அரசியல் மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பழைய கட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக மாநில அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமிப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமமுகவிற்கு பிரஷர் குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்திற்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதே சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

ரஜினி கட்சியின் பெயர்

இந்தநிலையில், ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர் மற்றும் சின்னம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, பெரிதாக மக்கள் மத்தியில் பரிச்சயம் இல்லாத , மக்கள் சேவை கட்சியை நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் 2018ம் ஆண்டு அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் எனும் பெயரில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின்னர், அக்கட்சியானது கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தின் மூலமாகவே மக்கள் சேவை கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட, பொது சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணைத்திடம் மக்கள் சேவை கட்சி
கோரிக்கை வைத்துள்ளது. அந்த விண்ணப்பத்தில் ரஜினிகாந்த் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்த் அதிகம் பயன்படுத்தும் ‘பாபா முத்திரை’ சின்னத்தை ஒதுக்கும்படியும், அது இல்லாதபட்சத்தின் ‘ஆட்டோ’ சின்னத்தை ஒதுக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனால், இதுதான் ரஜினியின் கட்சி என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here