Home செய்திகள் அரசியல் வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என அதிமுக துடித்துக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாமல் அதிமுக சந்திக்கும் முக்கியமான தேர்தல் என்பதால், எதிர்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது. இந்த சூழலில், அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

அதிமுக கூட்டணி 2016 Vs 2021

2016 சட்டப்பேரவை தேர்தலில் 6 சிறிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. ஆனால், அந்த 6 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே தேர்தலை எதிர்கொண்டன. இதனால், 234 தொகுதிகளிலும், தனது சின்னத்திலேயே களம் கண்டு அதிமுக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

தற்போது, பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகளுடன் பலமான கூட்டணியை அதிமுக கட்டமைத்துள்ளது. 179 தொகுதிகளில் அதிமுகவினரும், 12 தொகுதிகளில் கூட்டணி கட்சியினரும் என மொத்தம் 191 தொகுதிகளில் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கடந்த முறையைவிட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், பாமக போன்ற வாக்கு வங்கி உடைய கட்சியை கூட்டணிக்குள் இழுத்துள்ளது அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் என்றே கணிக்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியின் பலம்

10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருப்பது, அதிமுகவிற்கு பலமே. இதனால்தான், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவால் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட முடிந்தது. குறிப்பாக, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு வரை கூட அதிரடி அறிவிப்புகள் வெளியானதை மறந்துவிட முடியாது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு, பொங்கல் பரிசு ரூ.2,500 கூட்டுறவு வங்கி விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் போன்ற அறிவிப்புகள் அதிமுகவிற்கு வாக்குகளாக மாறும் என்று நம்பப்படுகிறது.

aiadmk news in tamil
aiadmk news in tamil

மேலும், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்பது போல், கடைசி ஓராண்டில் மக்களுக்கு பரிச்சயமான எளிய முதலமைச்சராக தன்னை முன்னிறுத்தி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கொரோனா காலத்தில் பம்பரமாக சுழன்று, மக்கள் மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். கட்சியிலும், யார் முதலமைச்சர் வேட்பாளர் போன்ற பல சர்ச்சைகளை சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார்.

இதுமட்டுமின்றி, திமுகவை தொடர்ச்சியாக குடும்ப கட்சி என்று விமர்சித்து வரும் அதிமுக, தன் மீது அந்த கறை படிந்திராமல் இருக்க முயற்சித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப்பிற்கு இம்முறை எம்.எல்.ஏ. சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை சாதுர்யமாக தவிர்த்து சாமானியர்களின் கட்சி அதிமுக என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசியளவிலும், காங்கிரஸை ஒப்பிடுகையில், பாஜகவில் வாரிசு அரசியல் சற்று குறைவே. எனவே, குடும்ப அரசியலுக்கு எதிரான நிலைபாடும் அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியின் பலவீனம்

ஆளுங்கட்சியாக இருப்பது, அதிமுகவிற்கு பலவீனமும்கூட. ஆளுங்கட்சி மீது மக்கள் மத்தியில் இயல்பாக தோன்றும் அதிருப்தி, கூட்டணியின் வெற்றி வாய்ப்பை குறைக்கும் என்றும் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெற்றியை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதிமுகவின் பிரதான வா்ககு வங்கியில் பெண்களும் அடங்குவர். குறிப்பாக, ஜெயலலிதாவின் ஆளுமைக்காகவே, பெண்கள் வரிசை வரிசையாக நின்று இரட்டை இலைக்கு வாக்களித்து செல்வர். ஆனால், அவரது மறைவு, தற்போதைய வேட்பாளர் பட்டியலில் பெண்கள் பிரதிநிதித்துவ குறைப்பு, பொள்ளாச்சி சம்பவம், பெண் எஸ்.பி.க்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு போன்றவை அதிமுகவிற்கு பெண்களின் வாக்குகள் எந்த அளவிற்கு விழும் என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அடுத்ததாக, பாஜகவுடனான கூட்டணி சிறுபான்மை சமூக வாக்குகளை வேறு அணிக்கு கொண்டு செல்லும் என்று நம்பப்படுகிறது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மற்ற சாதியினரை அதிமுகவிற்கு எதிரான அணியை ஆதரிக்க வைக்கும் என்று கூறப்படுகிறது. அமமுகவும் அதிமுகவின் வாக்கு வங்கியை கூறு போடும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை போன்ற மனித உரிமை மீறல்கள் அதிமுக அரசு மீதான கரும்புள்ளிகளாக உள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக, இதுவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்கு வாக்களித்த அதிமுக ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வார்காளா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எனவே, கூட்டணியின் பலவீனத்தை கடந்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here