Home செய்திகள் அரசியல் வியர்வை வழிய, வழிய களப்பணி: சேப்பாக்கம் இனி என்னோடது - உதயநிதி ஸ்டாலின்

வியர்வை வழிய, வழிய களப்பணி: சேப்பாக்கம் இனி என்னோடது – உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பம்பரமாக சுழன்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். கட்சியில் தனது தந்தை ஸ்டாலின் வகித்த திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பை ஏற்று வழி நடத்தி வரும் உதயநிதிக்கு ஆட்சியிலும் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஸ்டாலின் வழியில் பின்தொடர்ந்து செல்லும் உதயநிதிக்கு, உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஏன் துணை முதலமைச்சர் பதவிக்கூட வழங்கப்படும் என்று கிளப்பி விடப்பட்டது. அத்தகைய முக்கிய துறைகள் இல்லாவிட்டாலும், எப்படியும் அமைச்சராகிவிடுவார் என இளைஞரணி வட்டாரங்களில் பேசப்பட்டது.

ஆனால், இறுதியில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, எதிர்க்கட்சிகள் வாரி வீசும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டுதான்.

இதுமட்டுமின்றி, தற்போது உதயநிதி கைவசம் பல்வேறு படங்களை வைத்திருக்கிறார். படங்களில் நடிக்கும்போது, அரசு பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் என்பதால், உதயநிதிக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் தடைபட்டிருக்கும் சூழலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உதயநிதி பம்பரமாக சுழன்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்வது, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் குறைகளை கேட்டறிவது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

MLA in Chepauk-Tiruvallikeni constituency Udayanithi Stalin is busy doing field research.
MLA in Chepauk-Tiruvallikeni constituency Udayanithi Stalin is busy doing field research.

இதனால், அப்பகுதி மக்கள் திருப்தி அடைந்துள்ள நிலையில், இதற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான், அமைச்சர்கள் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தது, நினைவுக்கூரத்தக்கதாக மாறுகிறது.

திமுக அமைச்சரவை விரைவிலோ, தொலைவிலோ மாற்றப்படும் என்பது உறுதி. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற வாரிசு பிம்பத்தை தாண்டி, தொகுதிக்கு சிறப்பாக பணியாற்றிய எம்.எல்.ஏ.வாக தன்னை பரிணமித்து கொள்ள உதயநிதிக்கு அவரது களப்பணிகள் உதவும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here