Home செய்திகள் அரசியல் காமராஜர் முதல் எம்.ஜி.ஆர். வரை., ஆளுமைளை வைத்து ஸ்கெட்ச்: பாஜகவின் பிளான் என்ன?

காமராஜர் முதல் எம்.ஜி.ஆர். வரை., ஆளுமைளை வைத்து ஸ்கெட்ச்: பாஜகவின் பிளான் என்ன?

காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற பிற கட்சி ஆளுமைகளை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சித்து வருகிறது.

எதிர்காலத்தை உருவாக்க கடந்த காலம் மிகவும் முக்கியம். 1950களில் ஜனசங்கம் தொடங்கப்பட்டாலும், தற்போது நாடெங்கும் பரந்து விரிந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி 1980ல் தான் உருவானது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனுபவம், பெரிய வரலாறு, அனைத்து மாநில மக்களையும் கவரும் ஆளுமை மிக்க தலைவர் இல்லாத போதிலும், இந்துத்துவா என்ற வலுவான சித்தாந்தத்துடன் அரசியல் பிரவேசம் செய்தது.

இதனால், பட்டி தொட்டிகளில் எல்லாம் கட்சி பெயர் ஒலிக்க பல திட்டங்களை பாஜக கையாண்டது. அதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதித்த சர்தார் படேலை தங்களது சித்தாந்தத்துடன் இணைத்துப் பார்த்தது. இதே போல், சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரையும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் உரிமை கொண்டாடியது.

ஊழல் கரை படிந்த காங்கிரஸ் அரசு மீதான அதிருப்தி, மோடி அலை போன்ற காரணங்களுடன் சேர்த்து, இதுவும் 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். 1999ல் கூட்டணி தயவுடன் ஆட்சி அமைத்த பாஜக, 2014ல் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, 2019ம் ஆண்டில் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. தேசிய அளவில் கால் பதித்தாலும், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவால் நுழைய முடியவில்லை.

இதனால், மீண்டும் அதே அஸ்திரத்தை பாஜக கையில் எடுத்தது. எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பெரிய காங்கிரஸ் தலைவர்களை குறிப்பிட்டு பாராட்ட தொடங்கினார். அந்த வகையில், மத்திய பாஜக ஆட்சி, காமராஜர் விரும்பிய ஆட்சி என கடந்த ஆண்டு திருப்பூரில் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்ற பிறகு பெரியார் மீதான சித்தாந்த தாக்குதல்கள் குறைந்தன.

பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர் என்று பெரியார் பிறந்தநாள் அன்று எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். அதுவரை பெரியாரை ஈ.வே.ரா என்று பல மூத்த பாஜக தலைவர்கள் அழைத்து வந்தனர். ஆனால், தற்போது பெரியாரிஸ்டான குஷ்புவை கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, வெற்றிவேல் யாத்திரைக்கான வீடியோவில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பாஜக பயன்படுத்தியுள்ளது. அதில், “பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா” என்ற வரிகள் ஒலிக்க, பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கூட்டணி கட்சியாக இருந்தாலும், இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், அனைத்து மக்களும் எம்.ஜி,ஆரை போற்றுவார்கள். ஆனால் பிற கட்சிகள் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார். ஆனால், எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு பெற்று வருகிறார் என்பதை தான் அந்த வீடியோ உணர்த்துவதாக, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்தார். இந்தநிலையில், பிற கட்சி ஆளுமைகளை உரிமை கொண்டாடும் பாஜகவின் திட்டம் தமிழகத்தில் எடுபடுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here