Home செய்திகள் அரசியல் அமித்ஷா வருகை., திடீரென ஆக்டிவான மு.க.அழகிரி – சூடுபிடிக்கும் அரசியல் களம்!

அமித்ஷா வருகை., திடீரென ஆக்டிவான மு.க.அழகிரி – சூடுபிடிக்கும் அரசியல் களம்!

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மு.க.அழகிரி அரசியல் கட்சியை தொடங்கி பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்திற்கு மிக முக்கியமானது. தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளான ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், அனைத்து கட்சிகளும் ஆயத்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக அமர வைக்கப்பட்ட திமுக, எப்படியாவது ஆட்சி கட்டிலை அலங்கரிக்க வேண்டும் என போராடி வருகிறது. திமுகவின் கனவில் மண் அள்ளி போட வேண்டும் என பாஜக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

MK Alagiri political party and join the BJP-led alliance

வட மாநிலங்களில் அசுர பலத்துடன் உலா வரும் பாஜகவில் தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், திராவிட கட்சிகள். அதிமுகவை ஏற்கனவே தன் பிடியில் கொண்டு வந்துவிட்டது பாஜக. மீதம் இருப்பது திமுக மட்டுமே.

ஏற்கனவே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத கட்சியை மீண்டும் தோல்வியடைய வைத்தால், அதன் பலம் குறையும் என பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, திமுகவில் உள்ள பலரை கட்சிக்குள் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது. அந்த வகையில், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ. கு.க.செல்வம் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

தமிழக கனவிற்கு வலு சேர்க்க ரஜினியை கட்சிக்குள்ளோ அல்லது, கூட்டணிக்குள்ளோ கொண்டு வர வேண்டும் என பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், கழுவுற மீனில் நழுவுற மீன் போல், ரஜினி பாஜகவிற்கு பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார். தற்போது, கொரோனாவை காரணம் காட்டி அரசியல் பிரவேசத்திற்கே எண்ட் கார்டு போடுகிறார்.

இந்த சூழலில், குடும்பத்தில் இருந்தே திமுகவின் ஆட்டத்தை கலைக்கலாம் என பாஜக மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை, தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதனிடையே, வரும் 20ம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார்.

For Interesting Political News in Tamil

கலைஞர் திமுக என்ற கட்சியை மு.க.அழகிரி உருவாக்க இருப்பதாகவும், பாஜக கூட்டணிக்கு அவர் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த சூழலில், பாஜகவிற்கு மு.க.அழகிரி வந்தால் வரவேற்போம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். மேலும், வார இறுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வர இருப்பதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here