Home செய்திகள் அரசியல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமானின் பாட்ஷா பலிக்குமா?

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமானின் பாட்ஷா பலிக்குமா?

ஈழத்தமிழர் பிரச்சனைகளை பிரதான கொள்கையாக கொண்ட நாம் தமிழர் கட்சி ( NTK Party ) காலப்போக்கில் தமிழ் நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்னிருத்த தொடங்கியது. தற்போது ஆளும் அதிமுகவின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழர் என்றாலும் அது சீமானை சமாதானப்படுத்தும் விதமாக இல்லை.

தற்போது ரஜினி தமிழர் இல்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து முன்னிருத்தி வருகிறார் சீமான். கொள்கையை மாற்றி மாற்றி பரைசாற்றி வரும் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானால் அவர்களது தம்பிகளுக்கே இப்போது யாரை எதிர்க்கிறோம் என்ன கொள்கை என கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையில் சமீபத்தில் நாம்தமிழர் கட்சியில் வெடித்த உட்கட்சி பூசலும் அதில் சீமானே அனைத்து பதவியை பறிக்க நினைக்கிறார், கட்சியில் யாரும் வளரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் சீமான் உறுதியாக நிற்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளும் கட்சித் தொண்டர்களை பின்னோக்கி இழுத்துச் சென்றது.

To Read More Political News in Tamil from Thudhu

நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தல் களத்தை சந்தித்தது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகளை பெற்றனர். இது மொத்தம் 1.07 சதவீத வாக்குகளாகும்.

2017 ஆம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும், 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதி சட்டமன்றத் தேர்தலிலும் அக்கட்சி தனித்தே போட்டியிட்டது.

அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்து சந்திக்க உள்ளது. இந்த முறை சட்டப்பேரவைக்குள் நாம்தமிழர் கொடி பொருத்திய காரை நுழைய வைத்தே ஆக வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டம் வகுத்து வருகிறார்.

இந்த முறை தேர்தலில் 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். வேட்பாளர்களை பொருத்தவரை ஆண் பெண் என இரு பாலினத்தவருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பெண்களுக்கு கூடுமே தவிர குறைய வாய்ப்பு இல்லை என்று அக்கட்சியினர்கள் கூறுகின்றனர். கடந்த அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்களையும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையுமே விமர்சித்து வந்த சீமான், தற்போது அவரது கவனத்தை பாஜக-வின் பக்கம் திருப்பியுள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here