Home செய்திகள் அரசியல் ஸ்தம்பிக்க வைத்த தம்பிகள்., 6.85% வாக்கு சதவீதம் பெற்று 3வது இடம்: தமிழக அரசியலில் தடம்...

ஸ்தம்பிக்க வைத்த தம்பிகள்., 6.85% வாக்கு சதவீதம் பெற்று 3வது இடம்: தமிழக அரசியலில் தடம் பதித்த நாம் தமிழர் கட்சி!

தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக 6.85% வாக்குகளை பெற்று, நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 36.30% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளன. இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் அடுத்தபடியாக, மாற்று அரசியல் பேசும் சீமானின் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை அலங்கரித்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வரை டி.டி.வி.தினகரனின் அமமுகதான் 3வது இடத்தை பிடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணித்து வந்தனர். ஆனால், அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் வகையில், 6.85% வாக்குகளை அறுவடை செய்து, நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பிடித்துள்ளது.

குறிப்பாக, சுமார் 60 தொகுதிகளில் அதிமுக கூட்டணியின் வெற்றி கனவை நாம் தமிழர் கட்சியின் தங்கைகள் மற்றும் தம்பிகள் கலைத்திருக்கின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி இடையிலான வாக்கு வித்தியாசத்தைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், சுமார் 170 தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்து நாம் தமிழர் கட்சி தடம்
பதித்துள்ளது.

ntk gained 6.85% vote percentage 2021 tamil nadu election Naam Tamilar Katchi
ntk gained 6.85% vote percentage 2021 tamil nadu election Naam Tamilar Katchi

2016ம் ஆண்டில் தேர்தல் அரசியலில் களமிறங்கிய நாம் தமிழர் கட்சி, போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் 1.06% வாக்குகளை பெற்றது. இதைத்தொடர்ந்து, 2019 மக்களவை தேர்தலில் 3.91% வாக்குகளையும், தற்போதைய தேர்தலில் 6.95% வாக்குகளையும் கைப்பற்றியிருக்கிறது.

திடமான தமிழ் தேசிய கொள்கை பிடிப்பு, மாற்று அரசியல், தனித்து போட்டி, புதிய மற்றும் இளம் வாக்காளர்களின் ஆதரவு, ஆண்-பெண்களுக்கு சம வாய்ப்பு போன்ற காரணங்களால் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு தேர்தலுக்கு தேர்தல் உயர்ந்துக் கொண்டே போகிறது.

இதன் காரணமாக, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக, திமுகவிற்கு மாற்றாக கடந்த இரு தசாப்தங்களில் உருவான தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக (அதிமுகவிற்கு மாற்று என்று வேண்டுமானால் கூறலாம்) சித்தாந்தம் என்ற காரணியில் கோட்டை விடுகின்றன.

விஜய்காந்த் சுறுசுறுப்புடன் செயல்பட்ட காலகட்டத்திலேயே தேமுதிகவிற்கு சொல்லிக் கொள்ளும் வகையில் கொள்கை என்று ஒன்று இல்லை. மக்கள் நீதி மய்யத்திற்கும் இதே பிரச்சனை. அமமுக என்றைக்கு வேண்டுமானாலும் அதிமுகவுடன் இணைந்துவிடும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த சூழலில், கொள்கையில் திடமான பிடிப்புடன் இருக்கும் கட்சியாக நாம் தமிழர் கட்சி வளம் வருகிறது.

சித்தாந்த ரீதியில் உறுதியுடன் இருக்கும் அரசியல் இயக்கங்கள் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதை தமிழகம் ஏற்கனவே பார்த்திருக்கிறது. திமுக இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதேபோல், நாம் தமிழர் கட்சியும் படிப்படியாக வளர்ந்து வருகிறது.

அதே சமயம், அரசியல் வெற்றிக்கு கொள்கை பிடிப்பு மட்டும் போதாது. அண்மையில் சீமானின் முக்கிய மற்றும் பிரபலமான தம்பிகள் பலர் கட்சியை விட்டு வெளியேறினர். இப்படி கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து விலகினால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க நேரிடும்.

மேலும், பிற முக்கிய கட்சிகளில் இருந்து பெரிய தலைவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வந்தால், கட்சிக்கு அரசியல் ரீதியிலான ஆற்றல் கிடைக்கும். பல்வேறு வெற்றி கட்சிகளின் தொடக்கம் இப்படிதான் கட்டமைக்கப்பட்டது. இதுபோன்ற காரணிகளில் நாம் தமிழர் கட்சி கவனம் செலுத்தினால், தமிழ் தேசியம், திராவிடத்திற்கு மாற்றாக அமையலாம். மாற்றத்தை நோக்கிய பாதையில், 2021 சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சி ருசித்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here