Home செய்திகள் அரசியல் அரசியல் சதுரங்க வேட்டை: சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது- நீதிமன்றம்...

அரசியல் சதுரங்க வேட்டை: சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது- நீதிமன்றம் பரபரப்பு தீரப்பு!

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதல்வருக்கு எதிராக சச்சின் பைலட் போர்க் கொடி தூக்கியுள்ளார். சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தன் வசம் ஈர்த்துக் கொண்டு டெல்லி அருகே மானேசரில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்தார்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சச்சின் பைலட் அணி எம்எல்ஏக்களான பன்வார்லால் சர்மா மற்றும் சஞ்சய் ஜெயின் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இது குறித்து ராஜஸ்தான் போலீஸார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் ஜெயினை கைது செய்தனர்.

இதையடுத்து சச்சின் பைலட் அணி எம்எல்ஏக்கள் பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து ராஜஸ்தான் போலீஸார் அங்கு விரைந்தனர். இருப்பினும் அந்த பகுதிக்குள் நுழையவிடாமல் ஹரியானா போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ராஜஸ்தான் அமைச்சர் ரகு சர்மா கூறும்போது, 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பிடியில் இருப்பதாகவும் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்பட்ட சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அந்த சட்டமன்ற சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சபாநாயகர் நோட்டீஸ்-க்கு எதிராக சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here