Home செய்திகள் அரசியல் ரஜினியின் கட்சி பெயர், கொடி எப்படி இருக்கும் தெரியுமா?

ரஜினியின் கட்சி பெயர், கொடி எப்படி இருக்கும் தெரியுமா?

ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் மற்றும் கொடி எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து குழப்பங்கள் நீடித்த நிலையில், கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த நவம்பர் 30ம் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 3ம் தேதி “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’’ என ட்வீட் செய்தார். பின்னர், பாஜக மாநில அறிவுசார் பிரிவின் தலைவர் அர்ஜுனமூர்த்தியை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமிப்பதாக அறிவித்தார்.

rajinikanth politics latest news in tamil

கட்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினி திடீரென பெங்களூரு சென்றார். அங்கு தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ரஜினி ஆசி பெற்றார்.

மேலும், வரும் 14ம் தேதி வரை ரஜினி, பெங்களூருவிலேயே தங்கியிருந்து கட்சித் தொடர்பாக முக்கிய நபர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர் மற்றும் கொடி எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான கட்சிகளின் பெயர் கழகம் என்றே முடிகின்றன. திமுகவில் தொடங்கி, அதிமுக, மதிமுக, தேமுதிக வரை பல கட்சிகளின் பெயர் கழகம் என்றே முடிகின்றன.

திமுக, அதிமுகவிற்கு மாற்று என கூறி வரும் கட்சிகள், கழகம் என்ற வார்த்தையை தவிர்த்து வருகின்றன. பாமக , கமலின் மக்கள் நீதி மய்யம் போன்றவை கழகத்தை தவிர்த்து வேறு பின்னொட்டை வைத்துக் கொண்டன. மாற்றத்தை முன்னெடுக்கும் ரஜினியும், கழகம் என்ற வார்த்தை தவிர்ப்பார் என்று கூறப்படுகிறது.

ரஜினி ரசிகர்கள் தற்போது நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களின் நடுவில் ஸ்டார் சின்னத்தில் ரஜினிகாந்த் படத்தை பொறித்திய கொடியை பயன்படுத்துகின்றனர். இது ரஜினியின் சூப்பர் ஸ்டார் இமேஜை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

ஆனால், ரஜினியின் கட்சிக் கொடி வேறு விதமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக தான் இருக்க மாட்டேன் என ரஜினி முன்னதாக கூறியிருந்த நிலையில், அவரது படம் கொடியில் இடம்பெறாது என்று நம்பப்படுகிறது.

ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு ரசிகர்களைச் சந்தித்த போது அமைக்கப்பட்ட மேடையில், தாமரை மீது பாபா முத்திரை இடம் பெற்றிருந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் சின்னத்திலும் பாபா முத்திரை இடம்பெற்றுள்ளது. இதனால், கட்சி கொடியிலும், பாபா முத்திரை இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Rajinikanth Politics Party Name

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here