Home செய்திகள் அரசியல் சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். ஆனால், விடுதலையாவதற்கு சில தினங்களுக்கு முன், சசிகலா கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால், கடந்த 31ம் தேதி சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து சசிகலா பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றார். அப்போது, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் அவர் பயணித்தார். இது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடர்பாக சசிகலா மீது டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் நேரில் சென்று புகார் அளித்தனர். இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் தொடர்ந்து, சசிகலாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, கிருஷ்ணகிரியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஒருபோதும் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்ளவே முடியாது. ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் தலை வணங்காது”, என்று தெரிவித்தார்.

Silence in Sasikala case: OPS traveling on a separate route
Silence in Sasikala case: OPS traveling on a separate route

ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இதுவரை மௌனம் காத்து வருகிறார். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்திய நிலையிலும், அது பற்றி எந்த கருத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, சசிகலாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக செய்தி வெளியானவுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் ‘மனிதாபிமான’ அடிப்படையில் சசிகலா குணமடைய வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் செய்தி பதிவிட்டார். இது, ஓ.பன்னீர்செல்வத்தின் மீது மேலும் பல சந்தேகங்களை எழுப்பின.

கட்சியிலும், ஆட்சியிலும் ஓடங்கட்டப்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், மௌனமாக இருந்து காரியம் சாதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிலும் கூட, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களே அதில் அதிகளவில் உள்ளனர்.

இதனால், கட்சியில் தனது பலத்தை அதிகரிக்க ஓ.பன்னீர்செல்வம் மௌனமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சசிகலா குறித்த தனது நிலைப்பாட்டை வைத்து, தேர்தலின்போது தனது ஆதரவாளர்களுக்கு கூடுதல் இடத்தை பெற்று தர அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சசிகலாவிற்கு எதிரான கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here