Home செய்திகள் அரசியல் அதிமுக கூட்டணிக்கு குட் பை சொல்கிறதா பாமக? – ராமதாஸ் ட்வீட்டால் பரபரப்பு!

அதிமுக கூட்டணிக்கு குட் பை சொல்கிறதா பாமக? – ராமதாஸ் ட்வீட்டால் பரபரப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் வியூகங்களை வகுத்து செயல்பட தொடங்கிவிட்டன. தேர்தல் நெருங்கும் சூழலில், முக்கிய தலைவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் வாக்குகளை குறி வைத்தவாரே உள்ளன.

இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக அரசை விமர்சித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை… செய்யவும் மறுக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைத்த பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிமுக அரசை விமர்சிக்காத ராமதாஸ், தற்போது நேரடியாக தாக்கி உள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்க துணை முதல்வர் பதவி, கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகளை பாமக முன் வைத்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெறாத சூழலில்,
இந்த பேரத்திற்கு அதிமுக, திமுக கட்சிகள் செவி சாய்க்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேசமயம், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற உத்திகளை வகுத்து வருகிறார்.

இதற்காக, பாமகவை கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அதிமுகவை விமர்சித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் கூட்டணி பேரத்திற்கான வியூகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here