Home செய்திகள் அரசியல் சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகுமா?– உதயநிதியின் 100 நாள் ‘ஸ்கெட்ச்’

சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகுமா?– உதயநிதியின் 100 நாள் ‘ஸ்கெட்ச்’

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து 100 நாள் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்குகிறார்.

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மிக முக்கிய 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் மும்முரமாக செய்து வருகின்றன. அரசியல் கத்துக் குட்டியான மக்கள் நீதி மய்யம் முதல், ஜாம்பவான்களான திமுக, அதிமுக வரை கோட்டை கனவை நினைவாக்க பாடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர வைக்கப்பட்ட திமுக, இம்முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. 2016 தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றும் திமுக தோல்வியை தழுவியது. இதனால், கடந்த தேர்தலில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு களத்தில் இறங்க திமுக திட்டமிட்டுள்ளது.

கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம், தேமுதிக தலைமையிலான 3வது அணி. திமுகவிற்கு வரவேண்டிய வாக்குகளை, அது கணிசமாக பிரித்தது. இதனால், இம்முறை 3வது அணி உருவாகி விடக்கூடாது என, திமுக நன்றாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும், மக்களவை தேர்தலில் பயன்படுத்திய பார்முலா மூலம் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க திமுக காய் நகர்த்தி வருகிறது. மக்களவை தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட சூறாவளி பிரச்சாரத்தை போல், இம்முறையும் அவர் நிகழ்த்த இருக்கிறார்.

அதன்படி, சட்டப்பேரவை தேர்தலுக்கான 100 நாள் பிரச்சாரத்தை கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து சென்டிமென்ட் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்குகிறார். முதல்கட்டமாக, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

திரைப்பட நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த உதயநிதி ஸ்டாலின், 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக, அறிவித்தார். ஸ்டாலின் மகனாக, அவரின் அரசியல்வாரிசாக அரசியலுக்கு வரவில்லை என்றும், தொண்டர்களோடு தொண்டர்களாகவே இருக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.எந்த ஒரு கட்சி பதவியும் தேவையில்லை என்றும், பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

udhayanithi stalin twitter, eia draft 2020, central government

தொடர்ச்சியாக, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக உதயநிதி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2019 மக்களவை தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் கைக்கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் வெற்றிக்கு பின், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம், திமுக இளைஞரணி செயலாளராகத் உதயநிதி தேர்தெடுக்கப்பட்டார்.

முதலில் பதவிவேண்டாம் என மறுத்த உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களின் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் மட்டுமே பதவியை ஏற்றுக்கொள்வதாக கூறினார். இதேபோல், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுவிட்டால், உதயநிதிக்கு அரசியலில் ஏறுமுகம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here