Home செய்திகள் அரசியல் வெர்ஷன் 4.0: காங்கிரஸ் கட்சியை வெளியில் இருந்து நிர்வகிக்கும் ராகுல் காந்தி!

வெர்ஷன் 4.0: காங்கிரஸ் கட்சியை வெளியில் இருந்து நிர்வகிக்கும் ராகுல் காந்தி!

2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கடந்த ஆண்டு ஜூலையில் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 3ம் தேதியுடன் முழு நேர தலைமை இல்லாமல் நாட்டின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் ஓராண்டு செயல்பட்டுவிட்டது. தலைவராக இல்லாத போதிலும் கட்சியின் முகமாக ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார். வெளியில் இருந்து கட்சியை நிர்வகித்தும், முக்கிய முடிவுகளை எடுத்தும் வருகிறார். அந்த வகையில், ராகுல் காந்தியின் அரசியல் பயணம் தற்போது நான்காம் கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அவர் வகித்த பொறுப்புகளுக்கு ஏற்ப, அவரது பாதையையும் நான்காக பிரிக்கலாம்.

ராகுல் காந்தி 1.0 (2004 – 2015)
நேரு குடும்ப வாரிசான ராகுல் காந்தி 2004ம் ஆண்டில் அரசியலில் கால் பதித்தார். 2004 மக்களவை தேர்தலில் தனது குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் நின்று வெற்றி பெற்றார். 2007ம் ஆண்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இளைஞரணி தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் பொறுமை இல்லாத, கோபமான இளைஞராகவே ராகுல் காந்தி பார்க்கப்பட்டார். சட்டையை மடித்துக் கொண்டு ஆக்ரிரோஷமாக கூச்சலிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.அரசியலை முட்டு மோதி கற்றுக் கொண்டு வந்த அவருக்கு, 2013ம் ஆண்டில் துணைத் தலைவர் பதவி கிடைத்தது. கட்சியின் துணைத் தலைவராக இருந்த போது, தனது சொந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது குற்றம்சாட்டினார். தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும் அவரச சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். சட்ட ஆவணத்தை கிழிந்து எறிய வேண்டும் என ஆவேசமாக பேசினார். இதே காலத்தில் தான், இரு முறை ஆட்சியமைத்த காங்கிரஸ், தனது அரியாசனத்தை இழந்தது. அடுத்தடுத்து ஆந்திரா, அரியானா, ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், டெல்லி சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியை தழுவியது.

ராகுல் காந்தி 2.0 (2015-2017)
இந்த தோல்விகளுக்கு மத்தியில் 56 நாட்களுக்கு ராகுல் காந்தி மாயமானார். விடுப்புக்கு பின் புதிய அவதாரம் பெற்றார். ஆவேசம் தணிந்தது, அறிவாற்றலுடன் செயல்பட முயற்சித்தார். அதுவரை பொது நிகழ்வுகளுக்கு தலை காட்டாத ராகுல் காந்தி கள அரசியலில் குதித்தார். தொடக்கத்தில் பொதுமக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட நீண்ட உரைகளை ஆற்றி வந்த அவர், பின்னர் டி.ஆர். பாணியில் கவர்ச்சியான சொற்றொடர்களை பயன்படுத்த ஆரம்பித்தார். ஆளும் பாஜக அரசு இணையத்தில் ஆதிக்கம் செலுத்துவதை பார்த்து டுவிட்டர் கணக்கை தொடங்கினார். ஆனால், இந்த புது அவதாரம் காங்கிரஸுக்கு வாக்குகளை பெற்று தரவில்லை. அசாம், கேரளா, உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களில் சொதப்பியது.

ராகுல் காந்தி 3.0 (2017 – 2019)
தொடர் சொதப்பல்கள் ராகுலை மீண்டும் அவதாரம் எடுக்க வைத்தது. புதிய பரிமாணத்துடன் தலைவர் பதவியே ஏற்றார். தனது மதம், மற்றும் தெய்வ நம்பிக்கையை பொது இடங்களில் வெளிப்படுத்தினார். பாஜகவை வீழ்த்த சாப்ட் இந்துத்துவாவை கையில் எடுத்தார். 2017 குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்த இரண்டரை மாதங்களில் 27 கோயில்களில் தரிசனம் செய்தார். இதன் பலன் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. பிரதான கோயில்கள் அமைந்துள்ள 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் 10 தொகுதியை பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் பறித்தது. இத்துடன் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மீதான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி சேர்ந்துக் கொண்டார். இந்த ஃபார்முலாவோடு கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல்களை சந்தித்து, வெற்றி பெற்றார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கு களமிறங்குவதற்கு முன், இந்த ஃபார்முலாவில் ரஃபேல் ஊழலையும் சேர்த்துக் கொண்டார். ஆனால், இது எதுவும் இந்தி பெல்ட்டில் எடுபடவில்லை. குளறுபடியான கூட்டணியோடு தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸை, தேசியவாதத்தை வைத்து பாஜக வீழ்த்தியது.

ராகுல் காந்தி 4.0 (2019 – ????)
மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல், பின்னால் இருந்து காங்கிரஸ் கட்சியை தற்போதும் நிர்வகித்து வருகிறார். கொரோனா தொற்று, ஊரடங்கு குறித்து துறை சார்ந்த வல்லுநர்களுடனான உரையாடல்கள், கொரோனா, லடாக் விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை கட்சி சார்பில் முன் நின்று விமர்சிப்பது, பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வது என திரைக்கு பின் நின்று கட்சியை ராகுல் காந்தி இயக்கி வருகிறார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here