Home செய்திகள் உலகம் அமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கும் ரேப் பாடகர்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கும் ரேப் பாடகர்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

உலகின் நாட்டாமையாக செயல்படும் அமெரிக்காவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. குறிப்பாக, அந்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்க அதிபராக தேர்வாகும் ஒருவர், அந்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். அந்த வகையில், வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு தற்போதைய அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கும் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. கொரோனா, கருப்பர்கள் உரிமை உள்ளிட்ட விவகாரங்களின் காரணங்களால் இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கிறார்.

இந்தநிலையில், அமெரிக்க அரசியலில் திடீர் திருப்பமாக 2020 அதிபர் தேர்தல் போட்டியிடப்போவதாக, பிரபல ரேப் பாடகர் கன்யே வெஸ்ட் அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி டுவிட்டரில் அறிவித்தார். ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டனுக்கு நன்கொடைகளை வாரி வழங்கிய கன்யே வெஸ்டின் அரசியல் சார்பு, டிரம்ப் அதிபராக தேர்வான பிறகு மாறியது. டொனால்டு டிரம்ப்பிற்கும், அவரது ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ முழக்கத்திற்கும் கன்யே வெஸ்ட் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். அமெரிக்க அதிபரின் அலுவலகத்திற்கு சென்று, டிரம்ப்புடன் நட்பு பாராட்டினார். ஆனால், இந்த ஆதரவை கன்யே வெஸ்ட் அண்மையில் முறித்து கொண்டார்.

இதற்கிடையே, 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கன்யே வெஸ்ட் பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார். இதன் அடிப்படையில், யூகொவ் என்ற நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், 65% பேர் கன்யே வெஸ்ட் அதிபர் தேர்தல் போட்டியிட கூடாது என விருப்பம் தெரிவித்திருந்தனர். கருக்கலைப்பு உரிமைகள், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் கன்யே வெஸ்ட், தீவிர மத அடிப்படைவாதம், வலதுசாரி சிந்தனைகளை கொண்டவர். தற்போதைய முக்கிய வலதுசாரி தலைவர்கள் கொரோனா வைரஸை கேலி கூத்தாக சித்தரிக்கிறார்கள் என்றால், கன்யே வெஸ்ட் அதற்கு ஒரு படி மேல் சென்று தடுப்பூசிகளையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் விமர்சிக்கிறார். தடுப்பூசிகள் என்ற பெயரில் மைக்ரோசிப்கள் செலுத்தப்படுவதாகவும், இது ஒருவரை சொர்க்கத்திற்கு செல்வதை தடுப்பதாகவும் தெரிவிக்கிறார். கடவுளை பிரார்த்திப்பது மூலமே ஒரு நோயில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.

இந்தநிலையில், அதிபர் தேர்தலில் பர்த்டே பார்ட்டி என்ற கட்சியின் கீழ் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக கன்யே வெஸ்ட் அறிவித்திருக்கிறார். ரேப் பாடல்கள் மூலம் ஈட்டியுள்ள ஆதரவை வைத்து, அரசியலில் கால் ஊன்ற திட்டமிட்டு இருக்கிறார். அதிபர் தேர்தலில் தாமதமாக நுழைந்த இவருக்கு டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில், டிரம்புடனான நடப்பை முறித்து கொண்டாலும், ஜோ பைடனுக்கு கிடைக்க வேண்டிய கருப்பர்களின் வாக்கை தன் வசம் ஈர்த்து டிரம்ப்பிற்கு கன்யே வெஸ்ட் மறைமுகமாக உதவுவார் என்றே கூறப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here