சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த சம்பவம் தமிழகத்தில் பேசு பொருளாக மாறி வரும் நிலையில், அந்த சம்பவத்தில் தெரிவிக்கப்படும் காரணம் குறித்தும் காவல்துறை மேற்கொண்ட ஒழுங்குநடவடிக்கை குறித்தும் பார்க்கலாம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதில் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவில் வசித்து வரும் ஜெய்ராஜ்(55) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். ஊரடங்கை மீறி இவர்கள் கடை திறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களை போலீஸார் கைது செய்யமுற்பட்டதாகவும் அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் பணியை அவர்கள் தடுத்ததாக கூறி இருவர் மீதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது, கண்டன குரல்கள் விவாதநிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது.
அவர்களின் உயிரழப்புக்கு காவல்துறையினர்தான் காரணம் என தொடர் குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் எழுந்தது. இதையடுத்து போலீஸார் மீத பலருக்கும் அதிருப்தி ஏற்படுத்தி சூழல் உருவாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ரத்தம் ரத்தம் சொட்ட சொட்ட விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும், இதுதொடர்பான சாட்சியங்கள் அளிக்க முயன்றதாகவும் அவர் விசாரணையில் சாட்சி சொன்னார். இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு இந்த வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இவ்வழக்கில் சாட்சி அளித்த பெண் காவலர் ரேவதியை நீதிபதிகள் தொலைபேசி வழியாக பாராட்டினர். அதோடு பாதுகாப்பு மிக முக்கியம் என தெரிவித்தனர். இந்த உத்தரவையடுத்து சாத்தான்குளம் அருகே அரிவான்மொழியின் உள்ள பெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.