Home செய்திகள் உங்களுக்கு முருகன்., எங்களுக்கு மொழி: தமிழகமே உயிர்த்தெழு., தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்!

உங்களுக்கு முருகன்., எங்களுக்கு மொழி: தமிழகமே உயிர்த்தெழு., தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்!

தமிழ் கடவுகள் முருகனை வைத்து பாஜகவும், இந்தி திணிப்பை வைத்து திமுகவும் அரசியல் கணக்கு போட்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

2021 தமிழக சட்டசபை தேர்தல் மாநில கட்சிகளுக்கு மட்டுமின்றி, தேசிய கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின்றி திமுக மற்றும் அதிமுக களமிறங்குகின்றன. வரலாறு காணாத சரிவில் உள்ள காங்கிரஸ், தன்னை புதுப்பித்துக் கொள்ள தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. மக்களவை தேர்தல்களில் தொடர் வெற்றிகளை கண்ட பாஜக, நோட்டாவை பின்னுக்கு தள்ளி, தமிழகத்தில் காலூன்ற போராடி வருகிறது.

இந்த நிலையில் தான் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் பெரியார் சிந்தனையை மையமாக கொண்டு செயல்படும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளிட்டது. இந்த விவகாரம் பாஜகவுக்கு அல்வா துண்டை போல் கிடைத்தது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க தமிழ் கடவுள் முருகனை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கையில் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கந்த சஷ்டி கவசம் பாராயணம், வேல் பூஜை என இந்துக்களை ஈர்க்க பல நிகழ்ச்சிகளை பாஜக நடத்தி வருகிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற எண்ணத்தை மக்கள் மனதில் புதைக்க பல முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா, இந்துக்களை பாஜக வசம் திருப்ப உதவும் எனவும் நம்பப்படுகிறது.

இதனிடையே, கந்த சஷ்டி கவச விவகாரத்தில், நெருக்கடியை சந்தித்து வரும் திமுக, பாஜகவை வாஷ் ஆவுட் செய்ய இந்தி திணிப்பை இறுக்கி பிடித்துள்ளது. புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்ட மும்மொழி கொள்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், தற்போது மேலும் ஒரு விவகாரம் திமுகவுக்கு சிக்கி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழியை, நீங்கள் இந்தியரா என மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை காவலர் கேட்ட நிகழ்வு சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கனிமொழி, எனக்கு இந்தி தெரியாததால் என்னுடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி விமான நிலையத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி என்னை பார்த்து,“நான் ஒரு இந்தியரா” என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியராக இருக்க முடியும் என்ற நிலை எப்போது உருவானது? என குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழிக்கு தென் இந்திய அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறது. இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

இதேபோல, கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குரல் எழப்பினார். இது தொடர்பாக டுவிட்டரில் செய்தி பதிவிட்ட அவர், இந்தி அரசியலால் தென் இந்திய அரசியல் தலைவர்களுக்கு வாய்ப்புகள் எவ்வாறு பறிபோயின என்பது குறித்து விவாதிக்க இது சரியான தருணமாகும். இந்தி அரசியல் பல தென் இந்தியர்களை பிரதமர் ஆவதில் இருந்து தடுத்துள்ளது. தேவகவுடா, கருணாநிதி மற்றும் காமராஜ் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இந்த தடையை தேவகவுடா வெற்றிகரமாக தகர்த்தார்.

இருப்பினும், மொழியின் காரணமாக அவர் விமர்சிக்கப்பட்டு கேலி செய்யப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன, என்று கூறியுள்ளார். இந்த மொழி விவகாரம் சூடு பிடிக்க, நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், பாமர மக்களுகளின் கதி என்ன என்று திமுக ஐடி விங் இணையத்தில் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளன.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here