Home செய்திகள் தமிழக அரசின் புதிய அறிவிப்பு.....இன்னும் 4 மாதங்களுக்கு இலவச அரிசியா......?!

தமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு இலவச அரிசியா……?!

கொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு தங்களின் அன்றாட பசியை போக்குவது என்பதே கேள்விக்குறியாக ஆயிற்று. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த மாதம் வரை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி, பருப்பு, பார்மாயில், சர்க்கரை ஆகிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வந்தது.

இந்நிலையில் ஜூலை மாதம் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்ற அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதும் தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருப்பதால் இலவச பொருட்களை இந்த மாதமும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து ஜூலை 3 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் இது குறித்துப் பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ஜூலை 1 முதல் 3 ஆம் தேதி வரை கட்டணம் செலுத்தி ரேஷன் பொருட்கள் வாங்கிய அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களும் அடுத்த மாதம் தங்களது பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி அவர்கள் இந்த மாதம் கூடுதலாக 5 கிலோ அரிசி உட்பட மற்ற இலவச பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் வரும் நவம்பர் மாதம் வரை அனைத்து ரேஷன் குடும்ப அட்டைத் தாரர்களுக்கும் நியாய விலைக் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவசமாக 5 கிலோ ரேஷன் அரிசி அல்லது கோதுமை மற்றும் பருப்பு வழங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here