Home செய்திகள் தமிழகம் 7.5% இடஒதுக்கீடு கூடாது: பாஜக நிர்வாகி சர்ச்சை கடிதம்!

7.5% இடஒதுக்கீடு கூடாது: பாஜக நிர்வாகி சர்ச்சை கடிதம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தரக்கூடாது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு பாஜக நிர்வாகி நந்தகுமார் எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. தொடர்ந்து, ஒப்புதலுக்காக ஆளுநரிடமும் அனுப்பியது. ஆனால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தின. அரசு சார்பில் அமைச்சர்களும் ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர். மேலும், பாஜக மாநில தலைவர் எல்.முருகனும், தாமதிக்காமல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தநிலையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் நந்தகுமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,
“மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தரக் கூடாது .தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் சங்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள நந்தகுமார் எழுதிய கடிதத்திற்கும், பாஜகவிற்கும் சம்பந்தமில்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து, பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பதவியிலிருந்து நந்தகுமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here