Home செய்திகள் தமிழகம் ரூ.6 கோடி மோசடி புகார்., கே.சி.வீரமணியுடன் பகை: வசமாக சிக்கிக் கொண்ட முன்னாள் அமைச்சர்!

ரூ.6 கோடி மோசடி புகார்., கே.சி.வீரமணியுடன் பகை: வசமாக சிக்கிக் கொண்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது ரூ.6 கோடி மோசடி புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட மூன்று அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதில், ஒருவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில். வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இருவருக்கும், வணிக வரித்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்கும், கட்சியிலும், ஆட்சியிலும் கடும் மோதல் இருந்து வந்தது.

AIADMK ex-minister Nilofer Kafeel corruption case in Tamil
AIADMK ex-minister Nilofer Kafeel corruption case in Tamil

மேலும், கடந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் நிலோபர் கபில் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்தநிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், நிலோபர் கபிலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும், வீரமணியின் விசுவாசியான ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமாருக்கு வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ‘‘வீரமணியால்தான் தனக்கு வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை’’ என்று நிலோபர் கபில் செய்தியாளர்கள் சந்திப்பில் போட்டுடைத்தார். மேலும், வாணியம்பாடி அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரைத் தோற்கடிக்க நிலோபர் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், தேர்தலில் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில், அதிமுகிவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பதவியிலிருந்தும் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவத்துள்ளது. இதுமட்டுமின்றி, தற்போது, ரூ.6 கோடி மோசடி புகாரிலும் நிலோபர் கபில் சிக்கிக் கொண்டுள்ளார். அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் சுமார் ரூ.6 கோடி மோசடி செய்ததாக, நிலோபர் கபில் மீது டிஜிபி அலுவலகத்தில் அவரது அரசியல் உதவியாளரான பிரகாசம் புகார் தெரிவித்துள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here