Home செய்திகள் தமிழகம் Amma unavagam attacked in Tamil: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை...

Amma unavagam attacked in Tamil: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும்!

இது அந்த காலம் இல்ல., 2021: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும்!

சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்துக்குள் புகுந்து திமுக உறுப்பினர்கள் சிலர் அங்கிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் பொறிக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பெயர் பலகையை பிடுங்கி நடுரோட்டில் எறிந்து சூறையாடினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது மேலும் இந்த காட்சியில், இனி அம்மா உணவகம் கிடையாது என ஆக்ரோஷமாக கூறிய ஒலி பதிவாகி இருந்தது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021-ல் அதிக தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையோடு திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது. பதவியேற்பு விழா இன்னும் இரண்டு தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அம்மா உணவகம் சூறையாடப்ட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மா உணவகத்தின் முக்கியத்துவத்தை வாழ்க்கையில் ஒருமுறை அறியா மிடில் கிளாஷ், ஏழை மக்கள் இல்லை.

Amma unavagam attacked in Tamil: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும்!

2021 சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், திமுகவின் மீது பெரிதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது., திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் தொடரும், ரவுடிசம் அதிகரிக்கும் தமிழகம் ஸ்தம்பித்து போகும் போன்ற குற்றச்சாட்டுகள் ஆகும். அதற்கேற்ப திமுக வெற்றி பெற்று பதவியேற்பு விழா நடப்பதற்குள் அம்மா உணவக சூறையாடல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இருப்பினும் திமுக சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த இரண்டு பேர் கட்சியில் நீக்கப்படுகின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதேபோல் நீக்கப்பட்ட இருவரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை எனவும் இருவர் மீதும் காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளோம் எனவும் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அம்மா உணவகம் பெயர் பலகையை சூறையாடிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

திமுக ஆட்சிக்கு வருவது 20 ஆம் நூற்றாண்டில் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பத்தாண்டு தாகத்தை தீர்க்க வெற்றியை கொண்டாடி வரும் தொண்டர்களுக்கு மத்தியில் அடிமட்ட தொண்டர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடுவது கண்டித்தக்கது. அதேபோல் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது பலரின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

மக்கள் நலன் கருதி நாம் ஆட்சிக்கு வந்திருக்கும்., இது சமூகவலைதளங்கள் பரவி இருக்கும் காலம்., அடிமட்ட தொண்டரின் சிறு தவறும் வெட்ட வெளிச்சத்துக்கு வரவழைக்கப்பட்ட மீம்ஸ்கள் அணல் பறக்கும் என்பதை திமுக நிர்வாகிகள் தங்களது உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும் என வெகுஜனத்தினர் அறிவுறுத்துகின்றனர்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here