Home செய்திகள் தமிழகம் சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை தவிர, பிற மாநிலங்களில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, நேற்று 469 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,42,730 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த காலத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய செரோ சர்வே நடத்தப்பட்டது. உடலில் உருவாகியிருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிந்து, அதன் மூலம் ஒருவருக்கு கடந்த காலத்தில் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என ரத்த மாதிரிகளை கொண்டு பரிசோதிக்கப்படுகிறது.

இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும் கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் செரோ சர்வே நடத்தப்பட்டது. 26,640 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த 8ம் தேதி மேட்ரக்ஸிவ் என்ற ஆய்விதழில் வெளியானது.

Corona for 4 out of 10 people in Chennai

இதில், தமிழகத்தில் 31.5% பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அதாவது, கடந்த நவம்பர் மாதம் வரை, தமிழகத்தில் 2.3 கோடி பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது, அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட 36 மடங்கு அதிகமாகும்.

தமிழகத்தில் அதிகபட்சமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 51.05% பேருக்கு கொரோனா பாதிப்பு கடந்த காலத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், 40.9% பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 38% பேருக்கும், திருச்சியில் 32% பேருக்கும், கோவையில் 20.4% பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here