Home செய்திகள் தமிழகம் தமிழகத்தின் டாலர் சிட்டி திருப்பூர்!

தமிழகத்தின் டாலர் சிட்டி திருப்பூர்!

ஆடை உற்பத்தியில் இந்தியாவுக்கு மட்டுமில்லாமல் உலகுக்கே முன்னோடியாக இருக்கும் திருப்பூர் மாவட்ட வரலாறு சிறப்பம்சங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

திருப்பூர் என்ற பெயர் மகாபாரத காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
புராணக்கதைகளின்படி, பாண்டவர்களின் கால்நடைகள் திருடர்களால் திருடப்பட்டதாகவும்
பின் அர்ஜுனனின் படைகளால் அது மீண்டும் இவ்வூரிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. சங்க காலத்தில் சேரர்களால் ஆளப்பட்ட திருப்பூர் மாவட்டமானது பின் சோழர்களும் விஜயநகரப் பேரரசர்களும், மதுரை நாயக்கர்கள் ஆளும் ஆளப்பட்டது.

தமிழகத்தில் சென்னை எப்படி பல கோடி மனிதர்களை வாழ வைக்கிறது அதுபோலதான் திருப்பூரும். ஜவுளித் துறையால் இங்கு லட்சக்கணக்கான வெளிமாவட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.

ஆடை உற்பத்தியில் முதன்மை மாவட்டங்களாக திகழ்கிறது திருப்பூர். அதிலும் குறிப்பாக பின்னலாடை தொழிலில் இந்தியாவுக்கு மட்டும் இல்லாமல் உலகிற்கு முன்னோடியாக இருக்கிறது திருப்பூர். அதேபோல் உலக நாடுகள் தங்களது ஆடை உற்பத்திக்கு முதலில் தேர்வு செய்யும் ஓர் நகரமாக திருப்பூர் தான் விளங்குகிறது.

திருப்பூரில் 850 பின்னலாடை நிறுவனங்கள், 400 சாய ஆலைகள், 50 ப்ளீச்சிங் நிறுவனங்கள், 600 ப்ரிண்ட்டிங் நிறுவனங்கள், 400 எம்ப்ராய்டரி நிறுவனங்கள், 750 கம்போடிங் நிறுவனங்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பின்னலாடை சார்பு நிறுவனங்கள் உட்பட சுமார் 8,350 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான சிறுநிறுவனங்களும் இயங்குகின்றன. இவற்றில் சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.

நாட்டில் பெரும்பாலான ரெடிமேட் ஆடைகளும் டி-ஷர்ட் பனியனும் இங்கிருந்துதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ரெடிமேட் ஆடை 30 சதவீதமும், டீ சர்ட், பனியன் 46 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

இதன் மூலம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டி தருவதால் டாலர் சிட்டி என திருப்பூர் அழைக்க்கப்படுகிறது.
மேற்கூறியபடி இங்கு தயாரிக்கப்படும் பனியன்கள் வெளிநாடுகளில் மவுசு அதிகம். அண்மையில் ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்ட் வெளிநாடுகளில் இருந்து 10 ஆயிரம் ஆர்டர்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

அதேபோல் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களால் மறுசுழற்சி செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் டி-ஷர்ட்களும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்ட் தொடர்களில் பந்து எடுத்து தரும் சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கப்பட்டன.

தொழில் நிறுவனங்களைத் தவிர்த்து 2000 ஆண்டு பழமை வாய்ந்த சக்ரீஸ்வரர் கோயில், திருமூர்த்தி அணை, அமராவதி அணை ஆகியவை இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாக விளங்குகிறது. திருப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு, கரோனா ஊரடங்கால் டல்லடிக்கும் டாலர் சிட்டி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று நம்பப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here